சாந்தனு, அஞ்சலி நாயர் நடிப்பில் ‛மெஜந்தா' | பாகிஸ்தானுக்கு எதிரான கதையா? ரன்வீர் சிங்கின் துரந்தர் படத்திற்கு தடை | முதல் படம் திரைக்கு வரும் முன்பே 3 ஹிந்தி படங்களில் நடிக்கும் ஸ்ரீ லீலா! | ஜனவரி 1ம் தேதி முதல் புதுக்கட்டுப்பாடு : தியேட்டர் அதிபர் சங்கம் முடிவு | சிறை டிரைலர் வெளியீடு | ஜனநாயகன் படத்தின் டீசர் எப்போது | சூப்பர் மனிதநேயம் கொண்ட மனிதர் ரஜினி: ஒய்.ஜி.மகேந்திரன் வாழ்த்து | மெய்யழகன் விமர்சனம் குறித்து கார்த்தி பதில் | பனாரஸில் தேவநாகரி லோகோ உடன் ஒளிர்ந்த அவதார் பயர் அண்ட் ஆஷ் | ‛கராத்தே பாபு' டப்பிங்கை துவங்கிய ரவி மோகன் |

சேலத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் இயக்குனர் சேரன் "நான் கடன் பிரச்னையில் சிக்கி தவிப்பதால் படம் இயக்க முடியவில்லை" என்று பேசி இருப்பது தற்போது வைரல் ஆகி உள்ளது. அவர் மேலும் பேசியிருப்பதாவது:
நான் யாரையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நினைத்ததில்லை. நான் இருக்கும் இடத்தில் எல்லோரையும் சந்தோஷமாக வைத்துக்கொள்வேன். என்னுடைய படத்தில் வில்லனே இருக்க மாட்டார்கள். ஏனென்றால் நான் வில்லன்களை விரும்புவதில்லை. நான் வில்லனாகவும் இருப்பதில்லை. இதுதான் என்னுடைய வாழ்க்கை முறை.
எனக்கு வாழ்க்கையில் நிறையப் பிரச்னைகள் இருக்கிறது. கடன் நிறைய இருக்கிறது. படம் எடுக்க முடியவில்லை. படம் எடுக்க தயாரிப்பாளர் கிடைக்கவில்லை. கதை சொல்வதற்கு போனால் ஹீரோக்கள் கதை கேட்க மறுக்கிறார்கள். இந்த மாதிரி நிறையப் பிரச்னைகள் இருக்கிறது. ஆனால் நான் நிம்மதியாக தூங்குகிறேன். சந்தோஷமாக இருக்கிறேன்.
காரணம் என்னவென்றால் வாழ்க்கையை ஈசியாக எடுத்துக்கொண்டேன். எல்லாவற்றையும் கடக்கும் சக்தி நம்மிடம் தான் இருக்கிறது. எல்லோரையும் நேசியுங்கள். சிரித்த முகத்துடன் அன்பாக பேசுங்கள். எல்லா பிரச்னைகளும் சரியாகிவிடும். இவ்வாறு சேரன் பேசியிருக்கிறார்.