100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் மூக்குத்தி அம்மன் 2 : படத்தில் நடிப்பவர்கள் விபரம் | பாலிவுட்டை விட்டு விலக முடிவெடுத்த அனுராக் காஷ்யப் | என் பணியை சிறப்பாக செய்ய முயற்சிக்கிறேன் - கஜராஜ் ராவ் | விஷ்ணு விஷாலுக்கு வில்லன் ஆன செல்வராகவன்! | அடுத்த மாதம் 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு துவங்குகிறது | ராம்சரண் படத்திற்கு தயாரான சிவராஜ் குமார்! | நாகார்ஜூனா உடன் நடனமாடும் பூஜா ஹெக்டே! | பிளாஷ்பேக் : மோகன் கையில் மைக்கை கொடுத்த இயக்குனர் | பிளாஷ்பேக் : மறக்கடிக்கப்பட்ட மகா கலைஞன் கொத்தமங்கலம் சீனு | கோவில்களில் சினிமா பாட்டு பாட நீதிமன்றம் தடை |
தமிழில் பிடிச்சிருக்கு என்ற படத்தில் அறிமுகமானவர் விசாகா சிங். அதன் பிறகு சந்தானம் நடித்த கண்ணா லட்டு தின்ன ஆசையா உட்பட சில படங்களில் நடித்தவர் தற்போது தெலுங்கு, ஹிந்தியில் தலா ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருக்கும் விசாகா சிங், அது குறித்த ஒரு தகவலையும் வெளியிட்டிருக்கிறார்.
அதில், என்னால் நீண்ட நேரம் கீழே மற்றும் வெளியே இருக்க முடியாது. கால மாற்றத்தால் அடிக்கடி நடக்கும் வினோதமான சம்பவங்கள் விபத்து மற்றும் உடல்நல பிரச்சினைகளுக்கு பிறகு ஆரோக்கியமான கோடையை நோக்கி உடல்நிலை திரும்புகிறது. ஏப்ரல் மாதம் எப்போதுமே எனக்கு புத்தாண்டாகவே இருக்கிறது. ஒருவேளை இது புதிய நிதியாண்டு என்பதாலோ என்னவோ எனது பிறந்த மாதத்தில் முன் மாதம் என்பதால் கோடை நாட்களை நோக்கி ஆர்வத்துடன் முன்னேறி வருகிறேன் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
இதை வைத்து பார்க்கும் போது, கால மாற்றத்தால் ஏற்படும் உடல் பிரச்சினையால் அவர் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவர் பூரண நலம் பெற ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.