மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா | சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை | சிவராஜ் குமாருக்கு பதிலாக விஷால் | விஜய் மகன் இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | 27 ஆண்டுகளுக்கு முந்தைய ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா விடாமுயற்சி? | 20வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய அனிகா சுரேந்திரன் | தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கடந்த 2021ம் ஆண்டு இறுதியில் வெளியான புஷ்பா படம் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தது. படத்தின் பாடல்களும் பெரிய வெற்றி பெற வசூலை குவித்தது. படத்தின் 2ம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. முந்தைய பாகத்தில் நடித்தவர்களே இதிலும் நடிக்கிறார்கள். கூடுதலாக சாய்பல்லவி நடிப்பதாக கூறப்பட்டது. அதை இன்னும் படத் தரப்பில் உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்த நிலையில் அல்லு அர்ஜூனின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று 'புஷ்பா 2 : தி ரூல்' என்ற தலைப்புடன் முன்னோட்டம் வெளியிட்டுள்ளது. அதில் புஷ்பா கொல்லப்பட்டதாக பரபரப்பாக ஊடகங்களில் பேசப்படுகிறது. புஷ்பா தங்களுக்கு செய்த உதவிகளை மக்கள் பெருமையாக மீடியாக்களிடம் பேசுகிறார்கள். புஷ்பா இறந்து விட்டதாகவும், வெளிநாட்டுக்கு தப்பி சென்று விட்டதாகவும் மீடியாக்கள் ஆய்வு செய்கிறது.
இதன் காரணமாக புஷ்பா ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபடுவது போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. காவல் துறையினர், அரசியல்வாதிகள் தரப்பில் புஷ்பா கொல்லப்பட வேண்டியவர் என கருத்து கூறப்படுகிறது, மக்கள் தரப்பில் வழக்கமான நல்லவர் பிம்பம் புஷ்பா மீது கட்டமைக்கப்படுகிறது.
இறுதியாக புஷ்பா காட்டு விலங்குகளை கண்காணிக்க வைக்கப்பட்டுள்ள வீடியோவில் சிக்குகிறார். “காட்டு விலங்கு எல்லாம் ரெண்டு அடி பின்னால வச்சா, புலி வந்துருச்சுனு அர்த்தம், ஆனா அந்தப் புலியே ரெண்டு அடி பின்னால வச்சா புஷ்பா வந்துட்டான்னு அர்த்தம்” என்ற வசனத்துடன் 'கெத்தாகக் அல்லு அர்ஜூனின் இன்ட்ரோ வருகிறது. புஷ்பா போலீஸ் ஸ்டேஷனில் கெத்தாக உட்கார்ந்து கொண்டு “புஷ்பாவோட ரூல்” என்கிறார்.
முதல் பாகத்தில் செம்மரக் கடத்தல்காரராக சித்தரிக்கப்பட்ட புஷ்பா இரண்டாம் பாகத்தில் மக்கள் போராளியாக சித்தரிக்கப்படுவதை இந்த டீசர் காட்டுகிறது. படத்தை பற்றிய எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.