ரஜினி, கமல் இணையும் படத்தை இயக்குகிறேனா? : பிரதீப் ரங்கநாதன் சொன்ன பதில் | அஜித் 64வது படத்தில் இயக்குனர் சரண் பணியாற்றுகிறாரா? | காந்தாரா சாப்டர் 1 கிளைமாக்ஸ் சவால்களை வெளியிட்ட ரிஷப் ஷெட்டி | பிரியங்கா மோகனின் ‛மேட் இன் கொரியா' | பாலாஜி மோகன், அர்ஜுன் தாஸ் இணையும் ‛லவ்' | சூரியை கதாநாயகனாக வைத்து படம் இயக்கும் சுசீந்திரன் | கோர்ட் ஸ்டேட் vs நோ படி படத்தின் தமிழ் ரீமேக் புதிய அப்டேட் | 2025, இந்தியாவில் 500 கோடி கடந்த இரண்டாவது படம் 'காந்தாரா சாப்டர் 1' | பேட்ரியாட் படப்பிடிப்புக்காக லண்டன் கிளம்பிய மம்முட்டி | போன வாரமும் ஏமாற்றம் : தீபாவளியாவது களை கட்டுமா? |
வெற்றிமாறன் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், சூரி கதையின் நாயகனாக நடித்து கடந்த வாரம் வெளிவந்த படம் 'விடுதலை'. ரசிகர்களிடமும், விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்று இப்படம் வியாபார ரீதியாகவும் வசூலைக் குவித்து வருகிறது.
இப்படத்தின் சிறப்புக் காட்சி ரஜினிகாந்த்திற்கு பிரத்யேகமாகத் திரையிட்டு காட்டப்பட்டது. தயாரிப்பாளர் எல்ரெட் குமார், இயக்குனர் வெற்றிமாறன், சூரி ஆகியோரிடம் படத்தைப் பார்த்ததும் பாராட்டிப் பேசியுள்ளார். அது மட்டுமல்ல டுவிட்டரிலும் படத்தைப் பற்றி அவருடைய பாராட்டுக்களைப் பதிவிட்டுள்ளார்.
ரஜினிகாந்தின் பதிவிற்கு நன்றி தெரிவித்து சூரி, “இதுவரை கிடச்ச வாழ்த்துகளுக்கு சிகரமாக வந்தது தலைவர் சூப்பர் ஸ்டாரின் வாழ்த்து. யார பார்த்து பிரமிச்சு சினிமாவுக்கு வரணும்ன்னு நினச்சேனோ அவர் எங்கள் படைப்பையும், உழைப்பையும் பாராட்டி பேசிய தருணம் வாழ்க்கை முழுமை அடைஞ்சதா உணர்றேன். இறைவனுக்கு நன்றி,” என முதலில் ஒரு பதிவிட்டிருந்தார்.
பின் இருபது நிமிட இடைவெளியில் மீண்டும், “என்ன சொல்றதுன்னே தெரியலை தலைவரே... நெஞ்சார்ந்த நன்றிகள் .. என் கால்கள் தரையில் இல்லை.. கனவிலும் நினைக்காத தருணங்களை தற்போது வாழ்ந்து வருகிறேன்..,” ஒரு பதிவிட்டு மகிழ்ந்துள்ளார்.