மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
இயக்குனர் ஷங்கர் தனது திரையுலக பயணத்தில் 30 ஆண்டுகளை வெற்றிகரமாக கடந்து விட்டார். அதிலும் தற்போது ஒரு புதிய அனுபவமாக தமிழில் இந்தியன் 2 மற்றும் தெலுங்கில் ராம்சரண் நடிப்பில் உருவாகி வரும் கேம் சேஞ்சர் என இரண்டு படங்களை ஒரே சமயத்தில் மாறி மாறி இயக்கி வருகிறார். இதில் இந்தியன் 2 படம் கொரோனா காலகட்டத்தில், சில காரணங்களால் மேற்கொண்டு நகாராமல் தடைப்பட்டு நின்றபோது, தெலுங்கில் படம் இயக்க முடிவு எடுத்து ராம்சரண் படத்தை ஆரம்பித்தார் ஷங்கர். இந்த படத்தை தெலுங்கு திரையுலகின் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்து வருகிறார்.
பொதுவாகவே தயாரிப்பாளர்களை பொருத்தவரை தில் ராஜு ரசிகர்களிடம் நெருங்கி பழக முயற்சிப்பவர். பிரபல ஹீரோக்களின் படங்களை தயாரிக்கும்போது அப்டேட்டுகளை அள்ளி கொடுப்பவர். அந்த வகையில் தற்போது தனது சோசியல் மீடியா பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து உரையாடியபோது, தற்போது ராம்சரண் நடித்து வரும் கேம் சேஞ்சர் படத்திற்கு முதலில் கதாநாயகனாக முடிவு செய்யப்பட்டவர் பவன் கல்யாண் தான் என்கிற தகவலை தெரியப்படுத்தியுள்ளார் தில் ராஜு.
இயக்குனர் ஷங்கர் இந்த கதையை தன்னிடம் கொண்டு வந்தபோது, இது பவன் கல்யாணை வைத்து பண்ண வேண்டிய படம் என்றுதான் வந்தாராம். ஆனால் கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் அவர் சொன்ன கதையை கேட்டுவிட்டு இதற்கு ராம்சரண் தான் மிக பொருத்தமாக இருப்பார் என ஷங்கரிடம் கூறி அவரை கன்வின்ஸ் செய்ததாக ஒரு புதிய தகவலை கூறியுள்ளார் தில் ராஜு.