லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
பிரபல இயக்குனர் சிவாவின் தம்பியும், தமிழில் அம்மா அப்பா செல்லம், வீரம், அண்ணாத்த உள்ளிட்ட படங்களில் நடித்தவருமான நடிகர் பாலா கல்லீரல் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் கொச்சியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஐசியூவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நடிகர் பாலாவுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என டாக்டர்கள் கூறியதாக அவரது மனைவி எலிசபெத் தெரிவித்து இருந்தார்.
பின்னர் இதுகுறித்து மருத்துவமனையில் இருந்து வீடியோ ஒன்றில் பேசி வெளியிட்ட பாலா தனது உடல்நிலை குறித்து தெரிவித்தபோது, விரைவில் அறுவை சிகிச்சை ஒன்றை மேற்கொள்ள இருக்கிறேன் என்று,ம் சிகிச்சை முடிந்து நான் உயிர் பிழைக்க வாய்ப்பு இல்லாமலும் போகலாம் என்றும் சோகத்துடன் கூறியிருந்தார்.
இந்த அறுவை சிகிச்சைக்காக கல்லீரல் தானம் தரும் நபருக்காக காத்திருந்த நிலையில், தற்போது அவருக்கு வெற்றிகரமாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடந்து முடிந்துள்ளது. இதை தொடர்ந்து அவர் தற்போது மீண்டும் ஐசியூ வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.