காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு | வெகுளித்தனமாக பதில் சொல்லி குஞ்சாக்கோ போபனுக்கு சங்கடத்தை கொண்டு வந்த டூப் ஆர்ட்டிஸ்ட் | விடாப்பிடியாக நின்று மோகன்லாலை சந்தித்த 80 வயது ரசிகை | பிளாஷ்பேக்: மொழி மாற்றம் செய்து வியாபாரப் போட்டியில் வென்று காட்டிய ஏ வி எம்மின் 'அரிச்சந்திரா' | ரஜினி பட இயக்குனர் யார் ? பரவும் தகவல்கள் | அன்பே வா, அவள் வருவாளா, நம்ம வீட்டுப் பிள்ளை - ஞாயிறு திரைப்படங்கள் |

பாலிவுட் நடிகை அகான்ஷா சிங். பத்ரிநாத் கி துல்ஹனியா, மேத்தி கே லடூ, குயட் படங்களில் நடித்தார். தற்போது ரன்வே 34 படத்தில் நடித்து வருகிறார். அவ்வப்போது தமிழ், தெலுங்கு படங்களில் நடிப்பார். தமிழில் ஆதி ஜோடியாக 'கிளாப்' படத்திலும், ஜெய் ஜோடியாக 'வீரபாண்டிபுரம்' படத்திலும் நடித்தார்.
தற்போது புதுமுகம் ரூபேஷ் குமார் சவுத்ரி என்பவர் ஜோடியாக 'சஷ்டிபூர்த்தி' என்ற படத்தில் நடிக்கிறார். இவரே இந்த படத்தின் தயாரிப்பாளரும் கூட. பவன் பிரபா என்பவர் இயக்குகிறார். இளையராஜா இசை அமைக்கிறார். ரம்மி ரெட்டி ஒளிப்பதிவு செய்கிறார். ராஜேந்திர பிரசாத், அர்ச்சனா, அக்ஷயுத் குமார், ஒய்.விஜயா, சுபலேகா சுதாகர் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
படம் பற்றி இயக்குனர் பவன் பிரபா கூறியதாவது: சஷ்டி பூர்த்தி ஒரு சிறந்த குடும்ப பொழுதுபோக்கான திரைப்படமாக இருக்கும். நாயகனும், நாயகியும் நாயகனுடைய பெற்றோரின் 60ம் கல்யாணத்தை பிரமாண்டமாக நடத்த எண்ணுகிறார்கள். நாயகனுடைய பெற்றோராக ராஜேந்திர பிரசாத் மற்றும் அர்ச்சனா நடிக்கிறார்கள். அவர்களை சுற்றி நடக்கும் சுவாரசியமான கதைதான் சஷ்டி பூர்த்தி. சென்டிமென்ட் மற்றும் பொழுதுபோக்கு கலந்து வலம் வரும். படப்பிடிப்பு இந்த மாதம் துவங்கி ஒரே கட்டத்தில் முடிக்க திட்டமிட்டுள்ளோம். வருகிற ஜூலை மாதமே படத்தை வெளியிடவும் திட்டமிட்டுள்ளோம். என்றார்.




