பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ள பொன்னியின் செல்வன் 2 படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று பிரமாண்டமாய் நடந்தது. இதில் படத்தில் நடித்த நட்சத்திரங்களுடன் சிறப்பு விருந்தினர்களாக கமல், சிம்பு, அமைச்சர் துரை முருகன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
டிரெய்லரை வெளியிட்டு பேசிய கமல்ஹாசன் : உயிரே உறவே தமிழே. நான் எந்த மேடைக்கு போனாலும் இந்த வார்த்தை மாறாது. இதன் அர்த்தம் தம்பி சிம்புவுக்கு தெரியும். என் மகிழ்ச்சிக்கு காரணம் கரகோஷம் மட்டுமல்ல நல்ல கலைஞர்களுடன் பணியாற்றியதும் தான். மணிரத்னத்தை பார்த்து பொறாமைப்படுபவர்களில் நானும் ஒருவன். எனக்கும், அவருக்குமான தொடர்பு நாயகனுக்கு முன்பே தொடங்கி இப்போது வரை தொடர்கிறது.
நேற்று முன்தினம் வெளிநாட்டில் ஏ.ஆர்.ரஹ்மானை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த ஸ்டுடியோவில் ஒரேநேரத்தில் 50க்கும் மேற்பட்ட கலைஞர்கள் இசையமைத்து காண்பித்தனர். அதைக்கேட்டு நெகிழ்ந்துவிட்டேன். என்னால் பேசகூட முடியவில்லை. இப்படிப்பட்ட கலைஞர்கள் எல்லாம் ஒன்றாக இணைய வேண்டும்.
இந்த படத்தின் வெற்றிக்கு காரணம் காதலா, வீரமா என பட்டிமன்றம் நடக்கிறது. அது மணிரத்னத்தின் காதல், கல்கியின் மீது அவர் கொண்ட காதல். நானும் அவருக்கு காதலர் தான். இந்த படம் எடுக்கவே ஒரு தைரியம் வேண்டும். அதை பார்க்கும் போது வீரமும், காதலும் வென்றுள்ளது. அதற்கு உதாரணம் இந்த படத்தில் இணைந்தவர்கள் தான்.
பொன்னியின் செல்வனை எப்படி படமாக்க முடியும் என்றார்கள். ஆனால் மணி அதை செய்து காண்பித்துவிட்டார். கனவு கலையாமல் முதல் பாகம் தொடர்ந்து இரண்டாம் பாகம் நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. சோழர்கள் காலம் மட்டும் பொற்காலம் அல்ல இது தமிழ் சினிமாவின் பொற்காலம்.
இவ்வாறு கமல் பேசினார்.
நடிகர் விக்ரம் பேசுகையில், ஆதித்த கரிகாலனால் எப்படி நந்தினியை மறக்க முடியாதோ, அதேபோல் என்னால் இந்த படத்தில் நடித்ததை மறக்க முடியாது. ஆதித்த கரிகாலன் போன்ற கதாபாத்திரம் நடிக்க வேண்டும் என்பது எனது கனவு. மணி ரத்னம் வாழும் காலத்தில் நானும் வாழ்ந்திருக்கிறேன், அவர் இயக்கிய சினிமாவில் நானும் இருக்கிறேன். இரண்டு முறை இராவணன், இரண்டு முறை பொன்னியின் செல்வன் ஆக மொத்தம் 4 முறை அவருடன் படம் நடித்திருக்கிறேன்'' என்றார்.
ஐஸ்வர்யாராய் பேசுகையில், ''கேமரா முன் நின்ற முதல் நாள் போன்று இன்றுவரை நான் மணிரத்னம் மாணவியே. பல படங்களில் அவர் என்னை இயக்கிவிட்டார். ஆனாலும் அது போதாது,'' என்றார்.
த்ரிஷா பேசுகையில், ''குந்தவையாக நிறைய பேர் வேடமணிந்து எனக்கு அனுப்பினர் சிலருக்கு நன்றி சொல்ல முடிந்தது. உயிர் எப்போதும் உங்களுடையது,'' என்றார்.
கார்த்தி பேசுகையில், ''பையா படத்தில் நடித்த பின் நிறைய காதல் கடிதங்கள் வந்தன. இப்போது இன்ஸ்டாகிராமில் நிறைய குறுந்தகவல் வருகிறது,'' என்றார்.
நடிகர் ஜெயம் ரவி பேசுகையில், ‛‛பொன்னியின் செல்வன் ரசிகர்கள் எல்லோருக்கும் நன்றி. பொன்னியின் செல்வன் படம் பார்க்க தியேட்டருக்கு ஆக்ஷிஜன் சிலிண்டர் உடன் வந்தவர்களில் எல்லாம் நான் பார்த்தேன். ஒரு கதையை இரண்டு படமாக எடுத்து வைத்துவிட்டு முதலில் இதை பாருங்கள் பின்பு இதை காட்டுகிறேன் என்று சொன்னவர் தான் மணிரத்னம். கார்த்தி இல்லையென்றால் இந்த இரண்டு பாகத்தில் என்னால் முழுமையாக நடித்திருக்க முடியாது என்றார்.