மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
யு டியூப் வீடியோ தளத்தில் டீசர், டிரைலர் ஆகியவற்றிற்குக் கிடைக்கும் பார்வைகளைப் பொறுத்து அதன் சாதனைகளைப் பற்றித்தான் நடிகர்களின் ரசிகர்கள் அதிகம் பேசுவார்கள். ஆனால், யு டியூபில் இடம் பெறும் படங்கள் பெறும் பார்வைகளைப் பற்றி அதிகம் கண்டுகொள்ள மாட்டார்கள்.
இந்திய அளவில் ஒரு தெலுங்குப் படம் ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டு யு டியுபில் வெளியாகி மிகப் பெரும் சாதனை ஒன்றைப் படைத்துள்ளது. தெலுங்கின் பிரபல தயாரிப்பாளரான பெல்லம்கொன்டா சுரேஷின் மகனான பெல்லம்கொன்டா ஸ்ரீனிவாஸ் நடித்து 2017ல் வெளிவந்த தெலுங்குப் படம் 'ஜெய ஜானகி நாயகா'. பொயபட்டி சீனு இயக்க, தேவிஸ்ரீபிரசாத் இசையமைத்த இந்தப் படத்தில் ரகுல் ப்ரீத் சிங் கதாநாயகியாக நடித்திருந்தார்.
இப்படம் நான்கு வருடங்களுக்கு முன்பு ஹிந்தியில் 'கூன்கர்' என்ற பெயரில் டப்பிங் ஆகி யு டியூபிலும் பதிவேற்றப்பட்டது. தற்போது அப்படம் 700 மில்லியன் பார்வைகளைக் கடந்து புதிய சாதனையைப் படைத்துள்ளது. இந்திய அளவில் வேறு எந்த முன்னணி ஹிந்தி நடிகர்கள், தெலுங்கு நடிகர்களின் படங்களை விட அதிக அளவு பார்வைகளைப் பெற்று ஆச்சரியப்பட வைத்துள்ளது. இப்படத்திற்கு யு டியூபில் 4 மில்லியன் லைக்குகளும் கிடைத்துள்ளது.
இதற்கடுத்து இரண்டாவது இடத்தில் கன்னடத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற 'கேஜிஎப்' படத்தின் முதல் பாகம் 703 மில்லியன் பார்வைகளைப் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது. இப்படத்திற்கு 6 மில்லியன் லைக்குகள் கிடைத்துள்ளன. பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ், ஸ்ரீநிதி ஷெட்டி இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
பெல்லம்கொன்டா ஸ்ரீனிவாஸ், காஜல் அகர்வால் நடித்து தெலுங்கில் வெளிவந்த 'சீதா' படம் ஹிந்தியில் 'சீதாராம்' என்று டப்பிங் செய்யப்பட்டு யு டியூபில் பதிவேறி 588 மில்லியன் பார்வைகளைப் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளது. பெல்லம்கொன்டா ஸ்ரீனிவாசின் இரண்டு படங்கள் 500 மில்லியன் சாதனைகளைப் பெற்றிருப்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.
இந்த வரவேற்பால் பெல்லம்கொன்டா ஸ்ரீனிவாஸ் 'சத்ரபதி' தெலுங்குப் படத்தின் ஹிந்தி ரீமேக் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார்.