டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

துணிவு படத்தை அடுத்து அஜித் நடிக்கும் 62வது படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை மகிழ்திருமேனி இயக்கப் போகிறார். இந்த படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்று கடந்த ஒரு மாதகாலமாகவே அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில் அஜித்குமாரின் தந்தை கடந்தவாரம் மரணம் அடைந்ததால் அஜித் 62 வது படத்தின் அறிவிப்பு தள்ளிப் போவது தெரியவந்தது.
இந்த நிலையில் லைகா நிறுவனத்தின் தமிழ் குமரன் கூறுகையில், ஏகே 62 படத்தின் நல்ல செய்தி அடுத்த மாதம் வருமென்று தெரிவித்துள்ளார். இதை அடுத்து அஜித் 62 ஆவது படத்தின் அறிவிப்பு ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டு, மே மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்கும் என்பது உறுதியாகி இருக்கிறது. இப்படத்தின் படப்படிப்பை முடித்ததும் தனது இரண்டாவது கட்ட உலக பைக் சுற்றுப்பயணத்தை தொடங்குவதற்கு திட்டமிட்டுள்ளார் அஜித்குமார்.




