மாமன் படத்தை பின்பற்றும் '3BHK' | கல்லூரிகளில் படத்தை புரொமோஷன் செய்ய விருப்பமில்லை : சசிகுமார் | ரன்வீர் சிங் ஜோடியான சாரா அர்ஜுன் | 100 நாடுகள், 10 ஆயிரம் ஸ்கிரீன், 1000 கோடி சாதனை படைக்குமா ரஜினியின் கூலி | விஜய் பாணியை பின்பற்றினால் நல்லது: 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜூ | விரைவில் 'லக்கி பாஸ்கர் 2': வெங்கி அட்லூரி அப்டேட் | கூலி திரைப்படம் ஐமேக்ஸில் வெளியாவதில் புதிய சிக்கல்? | காமெடி நடிகரின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு 50 லட்சம் தர பிரபாஸ் வாக்குறுதி | படம் என்ன ஜானர் என்று ரிலீஸுக்கு முன்பே சொல்லிவிடுங்கள் ; சசிகுமார் வேண்டுகோள் | 'தொடரும்' கெட்டப்பில் புரோமோ வீடியோவுடன் பிக்பாஸ் சீசன் 7 அறிவிப்பை வெளியிட்ட மோகன்லால் |
'துணிவு' படம் வெளியான பின் அஜித் நடிக்கப் போகும் அவரது 62வது படம் பற்றி சர்ச்சைகள்தான் வர ஆரம்பித்தது. கடந்த வருடம் அப்படத்தை இயக்கப் போவதாக அறிவிக்கப்பட்டிருந்த விக்னேஷ் சிவன் இயக்கப் போவதில்லை என்று சொன்னார்கள். ஆனால், அது குறித்து எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை.
விக்னேஷ் சிவனே அவரது டுவிட்டர் தளத்திலிருந்து அஜித் 62 இயக்குனர் என்பதை நீக்கிய பின்தான் வெளிவந்த சர்ச்சைகள் உண்மைதான் என ரசிகர்களுக்குத் தெரிந்தது. இந்நிலையில் அஜித்தின் 62வது படத்தை இயக்கப் போவது மகிழ் திருமேனி என செய்திகள் வெளிவந்தன.
அதை நிஜமாக்கும் விதத்தில் இன்று(மே 01) நள்ளிரவில் 'விடாமுயற்சி' என்ற தலைப்பில் அஜித்தின் 62வது பட அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இன்று அஜித்தின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.
அனிருத் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார் என்பது மட்டுமே இன்று வெளியான டைட்டில் போஸ்டர் அறிவிப்பில் உள்ளது. கடந்த வருடம் அறிவிக்கப்பட்டபடி விக்னேஷ் சிவன் இப்படத்தை இயக்கவில்லை என்பதை எந்த ஒரு பத்திரிகைக் குறிப்பாகவும் வெளியிடாமல் நேரடியாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அஜித் சுற்றுப் பயணம் முடித்து வந்த பிறகு இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் எனத் தெரிகிறது.