நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் |
ஒபிலி கிருஷ்ணா இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், சிலம்பரசன், கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கவுதம் மேனன் மற்றும் பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பத்து தல'. இந்த மாதம் 30ம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் டிரைலர் இரு தினங்களுக்கு முன்பு சனிக்கிழமை இரவு யு-டியுபில் வெளியிடப்பட்டது.
24 மணி நேரங்களில் இந்த டிரைலர் 14 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. சிம்பு நடித்து வெளிவந்த படங்களின் டிரைலர்களில் முதல் முறையாக புதிய சாதனையைப் படைத்துள்ளது. 24 மணி நேரங்களில் 'வாரிசு' டிரைலர் 32 மில்லியன், 'பீஸ்ட், துணிவு' டிரைலர்கள் 30 மில்லியன், 'பிகில்' டிரைலர் 19.5 மில்லியன், 'வலிமை' டிரைலர் 17 மில்லியன் என முன்னணியில் உள்ளன. இப்போது 'பத்து தல' டிரைலர் 14 மில்லியன்களைப் பெற்று டாப் 5ல் இடம் பிடித்துள்ளது.
இரண்டு வாரம் முன்பு வெளியான 'பத்து தல' டீசர் 12 மில்லியன் பார்வைகளை மட்டுமே பெற்ற நிலையில் இப்போது டிரைலருக்கு அதை விட அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது.