நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' | 3 ஹீரோக்கள் இணையும் படம் |
தமிழ் சினிமா உலகின் முக்கிய நட்சத்திர ஜோடி நயன்தாரா, விக்னேஷ் சிவன். இவர்களுக்கு கடந்த வருடம் வாடகைத் தாய் முறையில் இரட்டைக் குழந்தைகள் பிறந்தது. கடந்த சில பதிவுகளாக தங்களது குழந்தையுடன் விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராமில் சில பதிவுகளைப் போட்டு வருகிறார். குழந்தைகளின் முகத்தைக் காட்டாமல் அவர் போடும் பதிவுகள் ரசிகர்களைக் கவர்ந்து வருகின்றன.
நேற்று இரவு, குழந்தைகளின் கைகளை பாசத்துடன் பிடித்துக் கொண்டிருக்கும் நயன்தாரா, விக்னேஷ் சிவன் புகைப்படத்தைப் பகிர்ந்து, “நமது அன்புக்குரியவர்களுடன் நடக்கும் எல்லாவற்றுடனும் மகிழ்ச்சி இணைக்கப்பட்டுள்ளது. அன்பு என்பது மகிழ்ச்சி, மகிழ்ச்சி என்பது அன்பு, அனைத்தையும் பற்றியது…. நீங்கள் வைத்திருக்கக் கூடிய அன்பு….” என்று குறிப்பிட்டுள்ளார்.
அஜித்தின் 62வது படத்தை இயக்கும் வாய்ப்பு பறி போனது பற்றி விக்னேஷ் சிவன் சிறிதும் கவலைப்படவில்லை. தனது குழந்தைகளுடன் இருப்பதற்கான நேரத்தை அது கொடுத்துள்ளது என்று ஒரு வாரம் முன்பு ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தார். அடுத்து கமல்ஹாசன் தயாரிப்பில், பிரதீப் ரங்கநாதன் இயக்கும் படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக செய்திகள் வந்துள்ளன.