'3 பிஎச்கே' முதல் 'தம்முடு' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? | ரிஷப் ஷெட்டியின் புதிய படத்தின் அப்டேட்! | சென்னை கல்லூரி சாலை நடிகர் ஜெய்சங்கர் சாலை ஆகிறது | மீண்டும் இணையும் பாண்டிராஜ், விஜய் சேதுபதி கூட்டணி! | சரியான நேரம் அமையும் போது சூர்யாவை வைத்து படம் இயக்குவேன் -லோகேஷ் கனகராஜ்! | புதுமுக இயக்குனரை ஆச்சரியப்படுத்திய விஜய்! - இயக்குனர் பாபு விஜய் | விஜய் உட்கட்சி பிரச்னை: உதயாவின் 'அக்யூஸ்ட்' படத்தில் இடம் பெறுகிறதா? | போகியை புறக்கணித்தார் சுவாசிகா: பழசை மறப்பது சரியா? | ஒரே படத்தில் இரண்டு புதுமுகங்கள் அறிமுகம் | துல்கர் இருப்பதால் நான் தனிமையை உணரவில்லை: கல்யாணி |
மடோன் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாவீரன். அதிதி ஷங்கர் நாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இப்போது நடைபெற்று வருகிறது. அடுத்ததாக ரங்கூன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் புதிய திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார். இதில் கதாநாயகியாக சாய் பல்லவி நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது. நடிகர் கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் மற்றும் சோனி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசைமைக்க உள்ளதாக படக்குழு தரப்பில் சொல்லப்படுகிறது .
இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு வருகின்ற ஏப்ரல் மாதத்தில் தொடங்க உள்ளது. படப்பிடிப்பு இந்தியா முழுவதும் உள்ள பல நகரங்களில் நடக்க உள்ளது. குறிப்பாக வடமாநிலங்களில் முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட உள்ளது. ராணுவ கதைகளம் கொண்ட இப்படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ அதிகாரியாக நடிக்கிறாராம்.