வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
பாகுபலி படம் மூலம் தென்னிந்திய அளவில் ரசிகர்களிடம் பிரபலமானவர் தெலுங்கு நடிகர் ராணா. சமீப காலமாக பிரபல ஹீரோக்கள் வெப்சீரிஸ்களின் பக்கம் தங்களது கவனத்தை திருப்பியுள்ள நிலையில் நடிகர் ராணாவும் முதன் முறையாக ராணா நாயுடு என்கிற வெப்சீரிஸில் நடித்துள்ளார்.
நிஜத்தில் இவரது சித்தப்பாவான நடிகர் வெங்கடேஷ், இந்த வெப்சீரிஸில் ராணாவின் தந்தையாக நடித்துள்ளார். தந்தைக்கும் மகனுக்கும் இடையே நடக்கும் ஈகோ போராட்டத்தை மையமாக வைத்து இந்த வெப்சீரிஸ் உருவாகி உள்ளது. சமீபத்தில் எட்டு எபிசோடுகளாக வெளியான இந்த வெப்சீரிஸுக்கு ஒரு பக்கம் ரசிகர்களின் ஆதரவு இருந்தாலும் பொதுவான நெட்டிசன்கள் பலரிடம் இருந்து கடுமையான விமர்சனங்கள் தான் அதிகம் வெளியாகின.
காரணம் இந்த இந்த வெப்சீரிஸில் ராணாவும் சரி.. வெங்கடேஷும் சரி, பல இடங்களில் சரளமாக கெட்ட வார்த்தைகளை பேசியுள்ளனர். இதன் புரமோஷன் நிகழ்ச்சியின்போதே கூட நடிகர் ராணா இது பற்றி கூறியிருந்தார். ஆனால் தற்போது இந்த வெப்சீரிஸ் வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்களே ஒரு கட்டத்தில் இந்த வார்த்தைகளை கேட்டு எரிச்சல் அடையும் விதமாக ஓவர் டோஸ் ஆக மாறிவிட்டது. இதற்கு கடுமையான விமர்சனங்கள் எழுந்ததைக் கண்டு, நடிகர் ராணா தனது சோசியல் மீடியா பக்கத்தில், “இந்த வெப்சீரிஸை ஆதரித்தவர்களுக்கு நன்றி.. இதை வெறுப்பவர்களிடம் நான் மனதார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.