மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
அமரர் கல்கி எழுதிய சரித்திர நாவலான பொன்னியின் செல்வன் அதே பெயரில் படமாகி, கடந்தாண்டு முதல்பாகம் வெளியாகி ரூ.500 கோடிக்கும் மேல் வசூலை குவித்தது. மணிரத்னம் இயக்கி இருந்தார். விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்ய லட்சுமி, சரத்குமார், ஜெயராம், பிரபு, விக்ரம் பிரபு, பார்த்திபன் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருந்தார். இதன் இரண்டாம் பாகம் ஏப்., 28ல் வெளியாக உள்ளது. தற்போது இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
இந்நிலையில் ஆசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா ஹாங்காங்கில் நாளை(மார்ச் 12) நடைபெறுகிறது. இதில் பொன்னியின் செல்வன் படம் சிறந்த படம், இசை, எடிட்டிங், ஒளிப்பதிவு, ஆடை வடிவமைப்பு, தயாரிப்பு வடிவமைப்பு என 6 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இவற்றில் கண்டிப்பாக ஏதேனும் சில பிரிவுகளில் இந்தப்படத்திற்கு விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விழாவில் பங்கேற்று சிறப்பிக்க லைக்கா சார்பாக அந்நிறுவனத்தின் ஜி்.கே.எம்.தமிழ் குமரன் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இயக்குநர் மணிரத்னம் சார்பாக நிர்வாக தயாரிப்பாளர் சிவா ஆனந்த் ஆகியோருடன் எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் மற்றும் ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் ஆகியோரும் ஹாங்காங் பயணம் மேற் கொண்டுள்ளனர்.