ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது |
மணிரத்னம் இயக்கத்தில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்ய லட்சுமி மற்றும் பலரது நடிப்பில் வெளியான சரித்திரப் படம் 'பொன்னியின் செல்வன்'. இப்படம் 500 கோடிக்கும் அதிகமான வசூலைக் குவித்தது. இப்படத்தில் நடித்தவர்களுக்கு இப்படம் நல்ல பெயரையும் பெற்றுத் தந்தது. சிறிய கதாபாத்திரங்களில் நடித்தவர்களுக்கும் கூட ரசிகர்களின் பாராட்டுக்கள் கிடைத்தது.
இரண்டு பாகங்களாக வெளியாக உள்ள இப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த வருடம் கோடை விடுமுறைக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் பாகத்தின் படப்பிடிப்பு நடத்திய போதே இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பையும் சேர்த்து முடித்துவிட்டார்கள். முதல் பாகத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் இரண்டாம் பாகத்தில் சில புதிய காட்சிகளைப் படமாக்க மணிரத்னம் திட்டமிட்டாராம்.
படத்தின் மையக் கதாபாத்திரமான வந்தியத் தேவன் கதாபாத்திரத்திற்குக் கூடுதலாகக் காட்சிகளைச் சேர்க்க முடிவு செய்து அக்கதாபாத்திரத்தில் நடித்த கார்த்தியை மீண்டும் படப்பிடிப்புக்கு அழைத்தாராம். ஆனால், அடுத்தடுத்து புதிய படங்களில் நடிக்க ஒத்துக் கொண்டதால் வந்தியத் தேவன் கதாபாத்திரத்தில் நடிக்க மீண்டும் நீளமான முடியை வளர்க்க முடியாது என கார்த்தி மறுத்துவிட்டதாக ஒரு தகவல்.
சரி, விக்ரம், ஜெயம் ரவி கதாபாத்திரங்களை கொஞ்சம் நீட்டித்து படமாக்கலாம் என அவர்களிடம் பேசிய போதும் அவர்களும் கார்த்தி சொன்ன அதே காரணத்தை சொல்லி ஒதுங்கியிருக்கிறார்கள். எனவே, கதாநாயகர்களை விட்டுவிட்டு ஐஸ்வர்யா ராய் சம்பந்தப்பட்ட காட்சிகளைப் படமாக்க தற்போது முடிவு செய்து அவரிடமும் பேசிவிட்டதாகச் சொல்கிறார்கள். இதற்காக படக்குழு விரைவில் மும்பை சென்று அங்கேயே காட்சிகளைப் படமாக்கப் போகிறார்களாம். எனவே இரண்டாம் பாகத்தில் ஐஸ்வர்யாவின் நந்தினி கதாபாத்திரத்திற்குக் கூடுதல் காட்சிகள் வரலாம்.