அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் சரித்திர நாவலை இரண்டு பாகங்களாக இயக்கி இருக்கிறார் மணிரத்னம். இதன் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30ம் தேதி திரைக்கு வந்தது. விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், பிரபு, திரிஷா, ஐஸ்வர்யா ராய் உட்பட பலர் நடித்திருந்த இந்த படம் இன்று(நவ., 18) 50வது நாளை எட்டி உள்ளது. அதோடு உலகளவில் இந்த படம் 500 கோடி வசூலை எட்டி உள்ளது. இதை படக்குழுவினர் பகிர்ந்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
முதல் பாகத்துக்கு கிடைத்த அதே வரவேற்பு இரண்டாம் பாகத்துக்கும் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் முதல் பாகத்தை படமாக்கிய போதே இரண்டாம் பாகத்திற்கான அனைத்து காட்சிகளையும் படமாக்கி விட்டார் மணிரத்னம். இந்த நிலையில் தற்போது இரண்டாம் பாகத்துக்கான டப்பிங், கிராபிக்ஸ், பின்னணி இசை கோர்ப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தை அடுத்த ஆண்டு ஏப்ரல் 28ம் தேதி வெளியிடுவதற்கு திட்டமிட்டுள்ளனர்.