பிளாஷ்பேக்: கனவில் அறிமுகமாகி, காலம் இணைத்து வைத்த காதல் மனங்களின் “மனோன்மணி” | நயன்தாரா ஆவணப்படத்தில் 'சந்திரமுகி' காட்சிகள்: நஷ்டஈடு கோரி மேலும் ஒரு வழக்கு | கூலி படத்திற்காக இரண்டு ஆண்டுகளாக கடின உழைப்பை போட்ட லோகேஷ் கனகராஜ் | ‛டிமான்டி காலனி 3' படப்பிடிப்பை தொடங்கிய அஜய் ஞானமுத்து | முதல் படத்திலேயே அதிர்ச்சி தோல்வியை சந்தித்த சூர்யா சேதுபதி | டாக்சிக் படத்தில் இணைந்த அனிருத் | ‛இவன் தந்திரன் 2'ம் பாகம் படப்பிடிப்பு துவங்கியது | பூரி ஜெகன்னாத் படத்தில் விஜய் சேதுபதி; ஹைதராபாத்தில் துவங்கியது படப்பிடிப்பு | தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் ராஜேஷின் கதாநாயகனாக 2வது பட அறிவிப்பு | 'காந்தாரா சாப்டர் 1' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழ் சினிமாவில் ஆர்.கே .செல்வமணி இயக்கிய செம்பருத்தி படத்தில் அறிமுகமானவர் ரோஜா. அதன் பிறகு தமிழ் ,தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்த ரோஜா தற்போது ஆந்திராவின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் அமைச்சராக அங்கம் வகித்து வருகிறார். இந்நிலையில் நேற்று தனது 49 வது பிறந்த நாளை கொண்டாடிய ரோஜா, திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அப்போது மீடியாக்களை சந்தித்த அவரிடம், அவரது மகள் அஞ்சு மாலிகாவின் சினிமா அறிமுகம் குறித்து மீடியாக்கள் கேள்வி எழுப்பினர்.
அப்போது என்னுடைய மகள் சினிமாவில் நடிகையாக அறிமுகமானால் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன். அவளை ஊக்கப்படுத்துவேன். ஆனபோதிலும் எனது மகளுக்கு சினிமாவில் நடிகையாவதை விட விஞ்ஞானியாக வேண்டும் என்ற ஆசைதான் அதிகமாக உள்ளது. அதனால் என்னுடைய மகள் சினிமாவில் நடிகை ஆவதற்கு வாய்ப்பில்லை என்று தெளிவுபடுத்தி இருக்கிறார் ரோஜா.
இதன்மூலம் தனது மகள் சினிமாவில் அறிமுகமாகப்போவதாக கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் வட்டமடித்து வந்த செய்திகளுக்கு ஒரு நிரந்தர முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் ரோஜா.