மலையாள திரையுலகில் குறிப்பிடத்தக்க கதாநாயகிகளில் ஒருவராக பிஸியாக நடித்து வருபவர் நடிகை அனு சித்தாரா. இவரை பொறுத்தவரை கதையை தாங்கி பிடிக்கும் கதையின் நாயகியாக, முன்னணி ஹீரோவுடன் டூயட் பாடும் ஜோடியாக, ஒரே ஒரு காட்சியில் மட்டுமே வந்து செல்லும் கெஸ்ட் ரோல் என எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் மறுப்பு சொல்லாமல் ஏற்றுக் கொண்டு நடிப்பவர். இந்த நிலையில் தற்போது தமிழில் சிம்பு, கவுதம் கார்த்திக் இணைந்து நடித்துள்ள பத்து தல படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அனு சித்தாரா.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பே சீமான், ஆர்கே சுரேஷ் உடன் இணைந்து அமீரா என்கிற படத்தில் கதாநாயகியாக நடிக்க தமிழுக்கு வந்தவர் தான் அனு சித்தாரா. ஆனால் அந்த படம் அப்படியே கிடப்பில் கிடக்கிறது. இதற்கிடையே வனம் உள்ளிட்ட ஓரிரு படங்களில் நடித்தார். இந்த நிலையில் தான் பத்து தல படம் மூலம் தமிழில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட வேண்டும் என அந்த படத்தின் ரிலீஸை ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறாராம் அனு சித்தாரா. வரும் மார்ச் 30ம் தேதி வெளியாக இருக்கும் இந்த படத்தில் முக்கிய கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.