ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி |
கடந்த வருடம் கன்னடத்தில் வெளியாகி, கன்னடம் மட்டுமல்லாது தென்னிந்திய மொழிகளிலும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று பாலிவுட்டிலும் கவனத்தை ஈர்த்த படம் காந்தாரா. ரிஷப் ஷெட்டி இயக்கி கதாநாயகனாக நடித்திருந்த இந்த படத்தில் கதாநாயகியாக நடித்தவர் சப்தமி கவுடா. ஆதிவாசி இனத்தை சேர்ந்த காவல்துறையில் பணிபுரியும் ஒரு பெண்ணாக நடித்து ரசிகர்களின் வரவேற்பையும் பெற்றார். இந்த படத்தை தொடர்ந்து அவருக்கு பாலிவுட்டிலும் வாய்ப்பு தேடி வந்துள்ளது. இந்த நிலையில் கன்னட திரை உலகின் மறைந்த மூத்த நடிகர் ராஜ்குமாரின் பேரனும் நடிகர் ராகவேந்திரா ராஜகுமாரின் மகனுமான யுவா கிருஷ்ணா முதல்முறையாக கதாநாயகனாக அறிமுகமாகும் யுவா என்கிற படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் சப்தமி கவுடா.
சமீபத்தில் இந்த படத்திற்காக இவர்கள் இருவரையும் வைத்து போட்டோஷூட் நடத்தப்பட்டது. அந்தசமயம் கிரிக்கெட் கிரவுண்டில் விளையாடிக் கொண்டிருந்த சப்தமி கவுடா அங்கிருந்தபடியே நேராக தயாரிப்பு அலுவலகத்தில் சென்று போட்டோஷூட்டில் அதே உடையுடன் கலந்து கொண்டாராம். அதன் பிறகு மீண்டும் கிரிக்கெட் விளையாட மைதானத்திற்கு திரும்பிய சப்தமி கவுடாவுக்கு சில மணி நேரங்களிலேயே அவர் தேர்வாகி விட்டார் என சந்தோஷ செய்தியும் தேடி வந்ததாம்.
“நீண்ட நாளைக்கு என்னை காந்தாரா படத்தின் லீலா கதாபாத்திரமாகவே இருக்க முடியாது, எனக்குள் இன்னும் பல கதாபாத்திரங்கள் ஒளிந்துள்ளன அவற்றை ஒவ்வொன்றாக வெளிப்படுத்த போகிறேன்” என்று கூறியுள்ளார் சப்தமி கவுடா.
காந்தாரா படத்தை தயாரித்த ஹோம்பலே பிக்சர்ஸ் நிறுவனம் தான் இந்த படத்தையும் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.