டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

ஆர்யா நடித்த கலாபகாதலன், வந்தாமல படங்களை இயக்கிய இகோர் இயக்கும் படம் மேன். இதில் ஹன்சிகா சோலோ ஹீரோயினாக நடிக்கிறார். இது அவருக்கு 51வது படம். இதில் ஆரி அர்ஜூனா வில்லனாக நடிக்கிறார். மெட்ராஜ் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மணிகண்டன் ஒளிப்பதிவு செய்கிறார் மற்றும் ஜிப்ரான் இசையமைக்கிறார்.
படம் பற்றி இகோர் கூறியதாவது : ஆண்மை என்பது ஒரு அகங்காரக் கூறாக மாறிவிட்டது. இது ஒரு போலி அடையாளத்தை உருவாக்கியுள்ளது. மேலும், இது பெண்களை அடக்கி, ஆதிக்கம் செலுத்துவது போன்ற ஒரு பிம்பத்தையும் கட்டமைத்துள்ளது. இந்த இயற்கைக்கு எதிரான ஒரு பெண்ணின் கிளர்ச்சிப் போரை உள்ளடக்கியதே மேன் என்ற தலைப்புக்குக் காரணம். ஹன்சிகா மோத்வானி இந்த படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். இதற்கு முன்பு பார்த்திராத ஹன்சிகாவை ரசிகர்கள் திரையில் பார்த்து ரசிப்பார்கள். ஆரி அர்ஜுனன் இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார், அவருடைய அர்ப்பணிப்பு மற்றும் நடிப்பு மிகவும் அசாதாரணமானது என்றார்.




