23 வருடங்களுக்கு பிறகு பிரசாந்த் - ஹரி கூட்டணி -அதிகாரப்பூர்வ அறிவிப்பு | விஜய்யின் ‛லியோ' பட சாதனையை முறியடித்த அஜித்தின் ‛குட் பேட் அக்லி' டிரைலர்! | பொன்ராம் இயக்கத்தில் சண்முக பாண்டியன் நடிக்கும் ‛கொம்பு சீவி' | சத்யராஜ் பாணியில் கதை தேடும் ‛மர்மர்' நாயகன் தேவ்ராஜ்! | தமிழகத்திற்காக மற்ற மாநிலங்களிலும் ‛குட் பேட் அக்லி' படத்தின் அதிகாலை காட்சி ரத்து! | ரோமியோக்களால் மொபைல் நம்பரை மாற்றிய நடிகை | விரும்பிய கல்லூரியில் சேர குத்துச்சண்டை பழகிய பிரேமலு ஹீரோ | புஷ்பா 2 சம்பவம் எதிரொலி ; ஆர்யா-2 ரீ ரிலீஸான தியேட்டர்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு | சன்னி தியோலை நேரில் சந்தித்த பிரபாஸ்: ‛ஜாட்' படத்திற்கு வாழ்த்து | பிரித்விராஜ்க்கு வருமான வரித்துறை நோட்டீஸ் ; எம்புரான் படம் காரணம் அல்ல |
ஒரு குறுகிய வட்டத்திற்குள்ளேயே இருந்த கன்னட திரையுலகின் வியாபார எல்லையை தென்னிந்திய அளவில் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் விரிவுபடுத்திய பெருமை பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கேஜிஎப் படத்தையே சாரும். அந்த படத்தின் வெற்றியைத்தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமும் பான் இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்த படத்தில் கதாநாயகனாக நடித்திருந்த யஷ்ஷின் ராக்கி பாய் கதாபாத்திரம் மொழி தாண்டி அனைத்து ரசிகர்களையும் கவர்ந்த ஒன்று.
இந்த நிலையில் சமீபத்தில் தெலுங்கு சினிமாவின் இயக்குனர்களான வெங்கடேஷ் மகா, நந்தினி ரெட்டி, இந்திராகாந்தி மோகன கிருஷ்ணா, சிவா நிர்வானா மற்றும் விவேக் ஆத்ரேயா ஆகியோர் தற்கால சினிமா பற்றி ஒரு விவாதம் நடத்தினார்கள். அந்த விவாதத்தின் போது ‛கேர் ஆப் காஞ்சிரப்பள்ளம்', ‛மாடர்ன் லவ் ஹைதராபாத்' உள்ளிட்ட சில படங்களை இயக்கிய இயக்குனர் வெங்கடேஷ் மகா, கேஜிஎப் படத்தில் யஷ் நடித்திருந்த ராக்கி பாய் கதாபாத்திரம் குறித்து கிண்டலாக தனது விமர்சனத்தை கூறினார்.
குறிப்பாக ராக்கியின் தாய் கேஜிஎப்-ல் உள்ள அனைத்து மக்களின் உதவியுடன் அவர்களுக்கு எதையாவது கொடுத்து, அங்கு இருக்கும் அத்தனை தங்கத்தையும் உனக்கு சொந்தமானதாக ஆக்கிக்கொள்ள வேண்டும் என கூறியிருப்பார். ராக்கியின் அந்த கதாபாத்திரம் சுயநலமாக தனது மக்களையே ஏமாற்றுவது போல சித்தரிக்கப்பட்டு இருந்தது என்று அந்த விவாதத்தில் இயக்குனர் வெங்கடேஷ் மகா கூற, அவர் கூறிய விதம் அங்கிருந்த இயக்குனர்களை வாய்விட்டு சிரிக்க வைத்தது.
இது குறித்த வீடியோ ஒன்று சோசியல் மீடியாவிலும் வெளியானது. இது கன்னட திரை உலகில் குறிப்பாக நடிகர் யஷ்ஷின் ரசிகர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து இயக்குனர் வெங்கடேஷ் மகா யஷ்ஷிடமும் அவரது ரசிகர்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் அவரும் அவரது படங்களும் கடுமையான நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும் என்றும் சோசியல் மீடியா மூலமாக கண்டனங்களையும் எச்சரிக்கையும் தெரிவித்து வருகின்றனர்.