ரஜினியை தொடர்ந்து ஜூனியர் என்டிஆரை இயக்கும் நெல்சன் | 23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹரி இயக்கத்தில் நடிக்கும் பிரசாந்த் | பார்க்கிங் மோதல் விவகாரம் : தர்ஷனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த சனம் ஷெட்டி! | 'இட்லி கடை' தள்ளிப் போக இதுதான் காரணமா ? | பிருத்விராஜிற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் | எம்புரான் தயாரிப்பாளர் கோகுலம் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல் | மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? |
இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டு நடிகர் ஆர்யா நடித்து வெளியான திரைப்படம் 'சர்பட்டா பரம்பரை'. இத்திரைப்படம் நேரடியாக திரையரங்கில் வெளியாகாமல் அமேசான் ஓடிடியில் வெளியானது.இந்த படம் விமர்சன ரீதியாக அனைவரின் பாராட்டையும் பெற்றது.
இந்த படத்தில் குத்துச்சண்டை வீரராக நடிகர் ஆர்யா நடித்திருந்தார். அறிமுக நடிகை துஷாரா விஜயன் கதாநாயகியாக நடித்திருந்தார். இவர்களுடன் பசுபதி, கலையரசன், சஞ்சனா நடராஜன், ஜான் விஜய், ஜான் கொக்கேன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.
இந்நிலையில் இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவாகும் என இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை இயக்குனர் பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது .இந்த படத்திலும் ஆர்யாவே கதாநாயகனாக நடிக்கவுள்ளார். தற்போது விக்ரம் நடிப்பில் உருவாகும் 'தங்கலான்' படத்தை இயக்கி வருகிறார் பா.ரஞ்சித் .அந்த படத்தின் பணியைத் முடித்துவிட்டு இந்த படத்தை இயக்குவார் என கூறப்படுகிறது.