பிளாஷ்பேக்: மெல்லிசை மன்னரின் 10ம் ஆண்டு நினைவு: விருதுகளை கடந்த கலைஞன் | சரோஜாதேவி மறைவு: முதல்வர், திரைப்பிரபலங்கள் இரங்கல் | சிவாஜிகணேசன் - சரோஜா தேவி இணைந்த நடித்த படங்கள் | எம்ஜிஆர் - சரோஜா தேவி இணைந்து நடித்த 26 படங்கள் | சூப்பர் குட் பிலிம்ஸ் 99வது தயாரிப்பில் விஷால் | 'தாமரை நெஞ்சம்' ஒரு படம் போதுமே: பாலசந்தர் அளித்த பதில் | தமிழில் தனது கடைசி படத்தில் நடித்த சரோஜா தேவி | ‛வெள்ளி விழா' படங்களில் முத்திரை பதித்த சரோஜா தேவி : வரிசை கட்டிய விருதுகள் | தனது உயிர் சென்னையில் பிரிய வேண்டும் என்று பேசியிருந்த சரோஜா தேவி | புதிய போட்டி வந்தாலும், சம்பளத்தை உயர்த்திய அனிருத் |
திரிஷா இல்லேன்னா நயன்தாரா படத்தை இயக்கியவர் ஆதிக் ரவிச்சந்திரன். இந்த படத்தில் ஆபாச காட்சிகளும், இரட்டை அர்த்த வசனங்களும் நிறைந்து கிடந்தன. இதையடுத்து சிம்புவை வைத்து அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்ற படத்தை எடுத்தார். இந்தபடம் பெரும் தோல்வியை தழுவியது. தற்போது பிரபுதேவாவை வைத்து பஹிரா என்ற படத்தை இயக்கி உள்ளார். 7 நாயகிகள் நடித்துள்ள இந்தப்படம் சிகப்பு ரோஜாக்கள் பட பாணியில் சைக்கோ திரில்லர் படமாக உருவாகி உள்ளது. இதில் ஆபாச காட்சிகள் நிறைய உள்ளதால் படத்திற்கு ஏ சான்று கிடைத்தது. இன்று(மார்ச் 3) படம் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் இந்தப்படம் தொடர்பாக ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு : ‛‛2018ல் ஆரம்பித்த பஹிரா படம் 2023 வரை நீண்ட நெடிய பயணமாக இருந்தது. கடினம் என சொல்ல முடியாது இருந்தாலும் சவால்கள் நிறைந்து இருந்தது. இந்தப்படம் குறிப்பிட்ட ரசிகர்களுக்கான படமாக இருக்கும். இந்தப்படம் தான் எனது கடைசி ஏ சான்று படம்'' என தெரிவித்துள்ளார்.
ஆதிக் ரவிச்சந்திரன் தற்போது விஷாலை வைத்து ‛மார்க் ஆண்டனி' என அதிரடி ஆக் ஷன் படத்தை இயக்கி வருகிறார்.