சிவகார்த்திகேயன் வளர்ச்சி எப்படி : கீர்த்தி சுரேஷ் சொன்ன பதில் | மாஸ்க் பட ரிசல்ட் நிலவரம் : ஆண்ட்ரியா வீட்டு நிலைமை? | அனைத்து மதங்களின் ரசிகன் நான் : ஏஆர் ரஹ்மான் | பிளாஷ்பேக்: விக்ரம் முதல் காட்சி வசூலை குழந்தைகளுக்கு கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 70 ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த பாடல் சர்ச்சை | ஹீரோவான யு டியூபர் | 4 வருடங்களுக்கு பிறகு வெளியானது 'பேமிலி மேன் 3' | 8 மணி நேர வேலை: ஓங்கி ஒலிக்கும் நடிகைகளின் குரல் | சர்வதேச திரைப்பட விழாவில் 'அமரன்' டீம் | டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு |

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஐதராபாத், ஜெய்சல்மர் ஆகிய இடங்களில் தொடர்ந்து நடைபெற்று, தற்போது மங்களூரில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இங்கே தற்போது முக்கியமான சண்டை காட்சி ஒன்று படமாக்கப்பட்டு வருகிறது. இதில் ரஜினிகாந்த், சிவராஜ்குமார் இருவரும் கலந்து கொண்டு நடித்து வருவதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் தற்போது இந்த படப்பிடிப்பில் யோகிபாபு கலந்து கொண்டு நடிக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது.
படப்பிடிப்பு தளத்திலிருந்து ரஜினிகாந்த், சிவராஜ்குமார், யோகிபாபு ஆகியோரின் புகைப்படங்களும் தற்போது வெளியாகி உள்ளன. ஏற்கனவே தர்பார் படத்தில் ரஜினிகாந்த், யோகிபாபு இணைந்து நடித்த காமெடி காட்சிகள் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றன. அந்த படத்தை தொடர்ந்து தற்போது மீண்டும் இதில் யோகிபாபு ரஜினியுடன் இணைந்து இருப்பதால் இதிலும் அதேபோன்று காமெடி காட்சிகள் சிறப்பாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.




