நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் |
வெங்கட் பிரபு தற்போது தெலுங்கில் முதன்முறையாக அடி எடுத்து வைத்து இளம் நடிகர் நாகசைதன்யா கதாநாயகனாக நடித்து வரும் கஸ்டடி என்கிற படத்தை தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளில் இயக்கி வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை கிர்த்தி ஷெட்டி நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பாதிக்கு மேல் முடிவடைந்த நிலையில் தற்போது ஐதராபாத்தில் இந்த படத்தின் பாடல் காட்சி ஒன்றை படமாக்கி வருகிறார் வெங்கட் பிரபு.
ஐதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில் இந்த பாடல் காட்சிக்காக 7 விதமான பிரமாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு இந்த பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. இந்தப் பாடலுக்கு நடனம் வடிவமைத்துள்ளார் சேகர் மாஸ்டர். ஏற்கனவே கிர்த்தி ஷெட்டிக்கு புகழ்பெற்று தந்த புல்லட் பாடல் போல இந்த பாடலும் அவரது திரையுலக பயணத்தில் ஹைலைட்டாக அமையும் என்கிறார்கள் படக்குழுவினர்.