ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
தமிழில் ரஜினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் மலையாள நடிகை மாளவிகா மோகனன். அதைத்தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார் மாளவிகா மோகனன். இந்தநிலையில் மலையாளத்தில் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அவர் கதாநாயகியாக நடித்துள்ள கிறிஸ்டி என்கிற திரைப்படம் நேற்று வெளியாகியுள்ளது. இந்த படத்தில் மலையாள இளம் நடிகரும் சமீபத்தில் லியோ படத்தில் இணைந்து நடித்து வருபவருமான மேத்யூ தாமஸ் என்பவருடன் ஜோடியாக நடித்துள்ளார் மாளவிகா மோகனன்.
தற்போது தனது டுவிட்டர் பக்கத்தில் தனது பெயரையும் கிறிஸ்டி என்றே மாற்றிக் கொண்டுள்ளார் மாளவிகா. இதற்கு முன்னதாக பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியானபோது அதில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்திருந்த திரிஷா தனது கதாபாத்திர பெயரையே தனது டுவிட்டர் கணக்கிருற்கும் சூட்டிக்கொண்டார். அதே பாணியைத்தான் தற்போது மாளவிகா மோகனும் பின்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.