லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
கன்னட சினிமாவில் அறிமுகமாகி இப்போது தென்னிந்திய சினிமாவிலும், ஹிந்தி சினிமாவிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் ராஷ்மிகா மந்தனா. தற்போது அனிமல் மற்றும் புஷ்பா 2 படங்களில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மாறி மாறி பயணித்து வருவதால் ஒவ்வொரு முக்கிய நகரங்களிலும் வீடு வாங்கி உள்ளாராம். அதாவது பெங்களூரு, கூர்க், ஐதராபாத், கோவா மற்றும் மும்பை ஆகிய நகரங்களில் விலையுர்ந்த சொகுசு வீடுகளை அவர் புதிதாக வாங்கி இருப்பதாக சில தினங்களாக செய்திகள் வந்தன.
இதை மறுக்கும் விதமாக, ‛‛இதுபோன்ற வதந்திகளை யார் பரப்புகிறார்கள் என தெரியவில்லை. ஆனால் இவை உண்மையாக இருந்தால் நன்றாக இருக்கும்'' என குறிப்பிட்டுள்ளார்.