ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
இரும்புத்திரை, ஹீரோ, சர்தார் போன்ற படங்களை இயக்கிய பி.எஸ்.மித்ரன் அடுத்ததாக சர்தார் படத்தின் 2ம் பாகத்தை இயக்க உள்ளார். இந்த நிலையில் தனது நீண்டகால காதலியான ஆஷாமீரா ஐயப்பன் என்பவரை இன்று (பிப்.,12) திருமணம் செய்துக்கொண்டார்.
சினிமா பத்திரிகையாளரான ஆஷாமீரா ஐயப்பனும், பி.எஸ்.மித்ரனும் நீண்ட காலமாக காதலித்து வந்த நிலையில், இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்தனர். இதனையடுத்து இருவருக்கும் இன்று எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமணத்தில் மேயாத மான், ஆடை போன்ற படங்களின் இயக்குனர் ரத்னகுமார் மற்றும் அயலான் படத்தின் இயக்குநர் ரவிக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.