இளையராஜா பாடலால் 'குட் பேட் அக்லி' ஹிட்டானதா?: கங்கை அமரன் பேச்சுக்கு மகன் பிரேம்ஜி சொன்னது என்ன? | உண்மை கதையில் யோகி பாபு | வெற்றி ஜோடியாக தமிழில் அறிமுகமாகும் தெலுங்கு நடிகை | 3 வருடங்களுக்கு பிறகு நாயகியாக திரும்பும் ஷ்ரத்தா | 'மாமன்' சூரியின் கதை: இயக்குனர் தகவல் | பிளாஷ்பேக்: பல தலைமுறைகளை வாழ வைத்த 'மைடியர் குட்டிச்சாத்தான்' | பிளாஷ்பேக்: காதல் சின்னத்தை மீட்டெடுக்க விரும்பிய வி.என்.ஜானகி | மே 1 : சினிமா ரசிகர்களுக்காக பல வெளியீடுகள் | கவினின் 'டாடா' படம் ஓடிடி.,யில் எங்கே போனது? | ஓடிடி.,யில் விலை போகாத 'கேங்கர்ஸ்' |
வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில், விஜய், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிக்கும் 'வாரிசு' படத்திற்கு இசையமைத்திருப்பவர் தமன். தெலுங்கில் முன்னணி இடத்தைப் பிடித்துவிட்ட தமன், தமிழில் இன்னும் அந்த இடத்தைப் பிடிக்காமலே இருக்கிறார். 'வாரிசு' படத்திற்குப் பிறகு அவருக்கு அந்த இடம் கிடைத்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.
'வாரிசு' படம் நாளை வெளியாக உள்ள நிலையில் படத்திற்காக உறுதுணையாக இருந்து உழைத்த ஒவ்வொருவருக்கும் தற்போது சமூக வலைத்தளத்தில் நன்றியைத் தெரிவித்து வருகிறார்.
அந்த வரிசையில் விஜய்க்கும் ஒரு நன்றிப் பதிவிட்டுள்ளார். அதில், “அண்ணா, விஜய் அண்ணா…டியர் அண்ணா, எமோஷனல் காட்சிகளைப் பார்க்கும் போது எனது இதயத்திலிருந்து அழுதேன், கண்ணீர் மிகவும் மதிப்பானது. வாரிசு படம் எனது குடும்பம் அண்ணா, எனது இதயத்திற்கு நெருக்கமானது. இப்படி ஒரு பெரிய வாய்ப்பை எனக்கு அளித்ததற்கு மிக்க நன்றி, டியர் அண்ணா லவ் யூ,” என அண்ணா, அண்ணா என மகிழ்ந்து பதிவிட்டுள்ளார்.
மேலும், 'பிளாக்பஸ்டர் வாரிசு, நாளை முதல்' என்றும் குறிப்பிட்டுள்ளார்.