ஓடிடி-யில் பெரும் விலைக்கு மோகன்லாலின் எல் 2 :எம்புரான் | புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் |
2015ம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான படம் டிமான்டி காலனி. அதன்பிறகு இமைக்கா நொடிகள், கோப்ரா போன்ற படங்களை இயக்கிய அவர், தற்போது டிமான்டி காலனி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திலும் முதல் பாகத்தில் நடித்த அருள்நிதியே நாயகனாக நடிக்கிறார். அவருடன் பிரியா பவானி சங்கர், அருண் பாண்டியன், அர்ச்சனா உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். சாம் சி.எஸ் இசையமைக்கிறார்.
இந்த நிலையில் தற்போது இப்படம் குறித்த வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இருள் ஆளப்போகிறது என்ற டைட்டில் உடன் வெளியாகியுள்ள அந்த வீடியோவில் இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என நான்கு மொழிகளில் வெளியாக உள்ளதாகவும், படத்தின் டெக்னீஷியன்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளது.