டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி ,ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உட்பட பலரது நடிப்பில் வெளியான படம் பொன்னியின் செல்வன். இப்படம் 500 கோடிக்கு மேல் வசூல் செய்திருக்கிறது. இதன் இரண்டாம் பாகம் வருகிற ஏப்ரல் மாதம் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 16வது ஆசிய திரைப்பட விழாவில் ஆறு பிரிவுகளில் பொன்னியின் செல்வன் திரைப்படம் தகுதி பெற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த படம், சிறந்த இசை அமைப்பாளர், சிறந்த பட தொகுப்பாளர், சிறந்த ஒளிப்பதிவாளர், சிறந்த கலை இயக்குனர், சிறந்த காஸ்ட்யூம் டிசைனர் என ஆறு பிரிவுகளில் இந்த இப்படம் நாமினேஷன் செய்யப்பட்டுள்ளது. இதில் எந்தந்த பிரிவுகளுக்கு விருது கிடைக்கப் போகிறதோ என்று பொன்னியின் செல்வன் படக்குழு ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறது.




