லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியானபோது அதில் நடித்த பல பிரபல நட்சத்திரங்களையும் தாண்டி ஓரளவு ரசிகர்களிடம் பேசப்பட்டவர்கலீல் ஒருவர் தான் நடிகர் அர்ஜுன் சிதம்பரம். அந்த படத்தில் வரகுணன் என்கிற ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதற்கு முன்பே அவர் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் மூலமாக ஓரளவுக்கு ரசிகர்களிடம் அறிமுகமாகி இருந்தார். அதன்பிறகு அநீதி, விஜய் ஆண்டனியின் கொலை உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்,
இந்த நிலையில் தற்போது அர்ஜுன் சிதம்பரத்தின் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. தான் நீண்ட நாட்கள் காதலித்து வந்த ஜெயஸ்ரீ சந்திரசேகரன் என்பவரை திருமணம் செய்ய இருக்கிறார் அர்ஜுன் சிதம்பரம். திருமண நிச்சயதார்த்த புகைப்படங்களை சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டு இந்த தகவலை மகிழ்ச்சியுடன் வெளிப்படுத்தியுள்ளார். இவரது இந்த திருமண நிச்சயதார்த்த நிகழ்வுக்கு நடிகைகள் மீனாட்சி சவுத்ரி, சஞ்சனா நடராஜன் மற்றும் நடிகர்கள் சந்தோஷ் பிரதாப், அஸ்வின் காக்குமானு உள்ளிட்ட பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.