தள்ளிப் போகிறது 'டுயூட்' | மீண்டும் விஷால், அஞ்சலி கூட்டணி | சிம்பு கையால் பட பெட்டிகளில் ரூ 500 : டி.ஆர் சொன்ன புது தகவல் | கமல்ஹாசன் தயாரிப்பில் பிரபுதேவா | 500 கோடி அறிவிப்பு, அப்புறம் பார்ட்டி, சொகுசு கார் உண்டா... | மீண்டும் கிசுகிசு : அர்ஜூன் தாஸ், ஐஸ்வர்ய லட்சுமி காதலா? | தெலுங்கு சினிமா ஸ்டிரைக் முடிவுக்கு வந்தது… | ரித்விகா திருமணம் திடீரென தள்ளிவைப்பு | தீபாவளிக்கு பிரதீப் ரங்கநாதனின் 2 படங்கள் போட்டி | இல்லங்களை ஆக்கிரமிக்க போகும் இந்த வார ஓடிடி ரிலீஸ்...! |
நடிகை நயன்தாரா பற்றிய 'நயன்தாரா - பியான்ட் த பேரி டேல்' என்ற டாகுமென்டரி நாளை மறுதினம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. நயன்தாரா, அவரது காதல் கணவர், இயக்குனர் விக்னேஷ் சிவன் இடையில் காதல் மலரக் காரணமாக இருந்த 'நானும் ரௌடிதான்' படத்தின் காட்சிகள், பாடல்கள், போட்டோக்களை பயன்படுத்த அதன் தயாரிப்பாளர் நடிகர் தனுஷிடம் 'என்ஓசி' கேட்க இரண்டு வருடங்களாகக் காத்திருந்து முடியாமல் போய் உள்ளது. அதனால், ஆவணப்படத்தில் அவற்றைப் பயன்படுத்த முடியாத காரணத்தால் திருத்தங்களைச் செய்துள்ளோம் என நயன்தாரா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும், 'நானும் ரௌடிதான்' படத்திலிருந்து 3 வினாடி காட்சிகளைப் பயன்படுத்தியதற்காக 10 கோடி நஷ்ட ஈடு கேட்டு தனுஷ் நோட்டீஸ் அனுப்பியுள்ளது பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.
அந்த ஆவணப்படத்தின் டிரைலர் கடந்த வாரம் நவம்பர் 9ம் தேதி நெட்பிளிக்ஸ் யு டியுப் தளத்தில் வெளியாகி உள்ளது. 2 நிமிடம் 25 வினாடிகள் ஓடும் அந்த டிரைலரின் 1 நிமிடம் 12வது வினாடி, 13வது வினாடி, 14வது வினாடிகளில் விக்னேஷ் சிவன் - நயன்தாரா, விஜய் சேதுபதி - நயன்தாரா, விக்னேஷ் சிவன் - விஜய் சேதுபதி, நயன்தாரா, ராதிகா ஆகியோர் இடம் பெற்றுள்ள மொத்தம் 3 வினாடிக்கு 'நானும் ரௌடிதான்' மேக்கிங் வீடியோ இடம் பெற்றுள்ளது. அந்த வீடியோவை அனுமதி பெறாமல் பயன்படுத்தி விட்டீர்கள் என்றுதான் தனுஷ் தரப்பிலிருந்து நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகத் தெரிகிறது.
அந்த 3 வினாடி வீடியோவை சமூக வலைத்தளங்களில் பலரும் பரப்பி வருகிறார்கள். இந்த 3 வினாடிக்காக 10 கோடி கேட்பது நியாயமா என்று பலரும் கமெண்ட் செய்கிறார்கள்.
அந்த வீடியோ லிங்க் : https://www.youtube.com/watch?v=KwTAGoleHAY&t=38s