வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
நகைச்சுவை நடிகராக இருந்து கதாநாயகனாக மாறிய சந்தானம் சமீப காலத்தில் வித்தியாசமான முயற்சி என்கிற பெயரில் குலு குலு மற்றும் ஏஜென்ட் கண்ணாயிரம் ஆகிய படங்களில் நகைச்சுவையை குறைத்து சீரியசான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். ஆனால் அவை ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. இந்த நிலையில் தற்போது புது வருடத்தை கொண்டாடும் விதமாக வெளிநாட்டு பயணம் மேற்கொண்டு சுற்றி வருகிறார் சந்தானம். அந்த வகையில் சமீபத்தில் புலியுடன் எடுத்துக்கொண்ட ஒரு வீடியோவை தனது சோசியல் மீடியாவில் வெளியிட்ட சந்தானம் அதற்காக தற்போது சர்ச்சையிலும் சிக்கியுள்ளார்.
வெளிநாட்டில் புலிகள் காப்பகம் ஒன்றில் உறங்கும் புலியின் வாலை பிடித்து இழுத்தபடி இதுதான் புலியின் வாலை பிடிக்கிறது என்பதா என்கிற கேப்ஷனுடன் ஒரு வீடியோவை தனது சோஷியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் சந்தானம். ஆனால் அந்த வீடியோவில் அந்த உறங்கும் புலியின் தலையில் அதன் பயிற்சியாளர் சிறிய தடியால் தட்டுகிறார். புலியும் சற்று உறுமியபடி எழுந்து பின் மீண்டும் அமைதியாக உறங்குகிறது. இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் இப்படி வனவிலங்குகளை துன்புறுத்துவதை சந்தானம் ஆதரிக்கிறாரா ? ஒருவர் புலியை தடியால் தாக்கும்போது அது குறித்து சந்தானம் தனது எதிர்ப்பை ஏன் தெரிவிக்கவில்லை என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேலும் இப்படி ஒரு வீடியோவை வெளியிட்டபின் இந்த வீடியோவுக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்த பின்னும் கூட ஏன் இன்னும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் இருந்து அதை நீக்காமல் இருக்கிறார் என்பது போன்று பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தேவையில்லாத ஒரு விஷயத்தில் தலையிடுவதை புலி வாலை பிடித்தது போன்று பிரச்சினையில் சிக்கிக்கொண்டான் என்பார்கள்.. ஆனால் இங்கே சந்தானமோ தற்போது புலியின் வாலையே பிடித்து சர்ச்சையில் சிக்கியுள்ளார் என்பதுதான் இது ஹைலைட்.