காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு | வெகுளித்தனமாக பதில் சொல்லி குஞ்சாக்கோ போபனுக்கு சங்கடத்தை கொண்டு வந்த டூப் ஆர்ட்டிஸ்ட் | விடாப்பிடியாக நின்று மோகன்லாலை சந்தித்த 80 வயது ரசிகை | பிளாஷ்பேக்: மொழி மாற்றம் செய்து வியாபாரப் போட்டியில் வென்று காட்டிய ஏ வி எம்மின் 'அரிச்சந்திரா' | ரஜினி பட இயக்குனர் யார் ? பரவும் தகவல்கள் | அன்பே வா, அவள் வருவாளா, நம்ம வீட்டுப் பிள்ளை - ஞாயிறு திரைப்படங்கள் |

தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர் விஜய தேவரகொண்டா. அவர் கடைசியாக நடித்த லைகர் படம் அவருக்கு தோல்வி படமாக அமைந்தது. என்றாலும் குஷி படத்தில் உற்சாகத்துடன் நடித்து வருகிறார்.
விஜய் தேவரகொண்டா ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தனது ரசிகர்களை ஏதாவது ஒரு வகையில் மகிழ்விக்கும் வழக்கம் வைத்திருக்கிறார். கடந்த 5 ஆண்களாக இதனை அவர் செய்து வருகிறார். இந்த ஆண்டு அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட 100 ரசிகர்களை சுற்றுலாவுக்கு அனுப்பி வைக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‛‛5 ஆண்டுகளுக்கு முன்பிருந்து கடைப்பிடித்து வரும் ஒரு நடைமுறை. இந்த ஆண்டு சிறப்பான ஐடியா ஒன்றை வைத்திருக்கிறேன். உங்களில் (ரசிகர்கள்) 100 பேரை விடுமுறை கொண்டாட்டத்திற்கு சுற்றுலா தலத்துக்கு அனுப்ப போகிறேன். அதற்கான அனைத்து செலவுகளும் செலுத்தப்பட்டு விடும். எந்த இடம் என தேர்வு செய்ய எனக்கு உதவுங்கள் என குறிப்பிட்டு உள்ளார்.
இந்த பதிவுக்கு கீழ் இந்திய மலை பகுதிகள், இந்திய கடற்கரை பகுதிகள், இந்திய கலாசார சுற்றுலா, இந்தியாவின் பாலைவனம் ஆகிய சுற்றுலாவுக்கான 4 பொதுவான இடங்களை குறிப்பிட்டு உள்ளார். இந்த இடங்களில் ஒன்றை தேர்வு செய்யும்படி, அதற்கான வாய்ப்பையும் ரசிகர்களிடமே விட்டு உள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.




