ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
சென்னை தரமணியில் உள்ளது எம்.ஜி.ஆர் திரைப்பட கல்லூரி. அதை ஒட்டி அமைந்துள்ளது பிலிம் சிட்டி. இங்கு காவல் நிலையம், பஸ் நிலையம், பங்களா, குடிசை, பாலம் உள்ளிட்ட நிரந்தர அரங்கங்கள் உள்ளது. இதுதவிர நவீன இண்டோர் ஸ்டூடியோவும் உள்ளது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இங்கு பராமரிப்பு இல்லாதால் செட்டுகள் வீணானதுடன், படப்பிடிப்பு பகுதிகள் புல், புதர்கள் முளைத்து வீணாகி உள்ளது.
நகருக்குள் இருக்கும் ஒரே பிலிம் சிட்டி இதுதான் இதை சீரமைக்க வேண்டும் என்கிற கோரிக்கை நீண்டகாலமாக திரைத்துறையினரால் வைக்கப்பட்டது. தற்போது தமிழக அரச இதனை சீரமைக்க முன்வந்துள்ளது. இதற்காக முதல் கட்டமாக அடிப்படை வசதிகளை சீரமைக்க 5 கோடி ஒதுக்கி உள்ளது.
இதுகுறித்து செய்தி விளம்பரத்துறை அமைச்சர் சாமிநாதன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: சென்னை மாநகரப் பகுதி, தரமணியில் சுமார் 12 ஏக்கர் பரப்பளவில் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் பிலிம் சிட்டி அமைக்கப்பட்டிருக்கிறது. கடந்த 10 ஆண்டு காலமாக பராமரிக்கப்படாமல் இருந்தது. அங்கே சினிமா படப்பிடிப்பு நடத்தக்கூடிய வகையில், அதற்குரிய புனரமைப்புப் பணியில் ஈடுபட வேண்டும் என்று அதற்கான அரசாணை வெளியிடப்பட்டு, அதற்கு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய உத்தரவிடப்பட்டிருக்கிறது.
5 கோடி ரூபாய் முதல் கட்டமாக நிதி வழங்கப்பட்டிருக்கிறது. திட்ட அறிக்கை வந்த பிறகு திரைப்படத் துறையினர் எதிர்பார்க்கக் கூடிய வகையில் முடிந்த அளவு அதில் அடிப்படை வசதிகளை செய்து தருவது தான் அரசினுடைய நோக்கம். இவ்வாறு அமைச்சர் சாமிநாதன் கூறினார்.