ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
வினோத் குமார் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள படம் லத்தி. அவருக்கு ஜோடியாக சுனைனா நடித்திருக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என நான்கு மொழிகளில் டிசம்பர் 22 ஆம் தேதி வெளியாகிறது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தை ராணா, நந்தா ஆகியோர் தயாரித்துள்ளனர். தற்போது இப்படத்திற்கான பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார் விஷால். இந்த நிலையில் லத்தி படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் குறித்த ஒரு தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது. அதில், லத்தி படத்திற்கு தணிக்கை குழு யு ஏ சான்றிதழ் அளித்திருப்பதாகவும், இந்த படம் 142 நிமிடங்கள் அதாவது இரண்டு மணி நேரம் 22 நிமிடங்கள் ஓடக்கூடியது என்றும் பட நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்து இருக்கிறது.