ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் இந்த ஆண்டின் அதிக எதிர்பார்ப்பை எற்படுத்திய படமாக இருந்த 'அவதார் 2 - த வே ஆப் வாட்டர்' படம் நேற்று உலக அளவில் வெளியானது. இந்தியாவில் ஆங்கிலம், தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என ஆறு மொழிகளில் சுமார் 4000 தியேட்டர்கள் வரை படம் வெளியாகி உள்ளது.
இந்திய அளவில் நேற்றைய முதல் நாள் வசூலாக சுமார் 40 கோடி வந்திருக்கலாம் என முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 'அவஞ்சர்ஸ் என்ட் கேம்' படத்தின் முதல் நாள் வசூலான சுமார் 50 கோடி வசூலைக் கடந்த முடியாமல் 'அவதார் 2' தடுமாறியுள்ளதாகச் சொல்கிறார்கள்.
பட வினியோகத்தில் சதவீத அடிப்படையில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக பல தியேட்டர்கள் நேற்று இப்படத்தைத் திரையிடாமல் ஒதுங்கிக் கொண்டன. அதன்பின் நடைபெற்ற பேச்சு வார்த்தைகளில் சுமூக முடிவு எட்டப்பட்டு இன்று முதல் சில பல தியேட்டர்களில் படத்தைத் திரையிட முடிவு செய்துள்ளார்களாம்.
முழுக்க முழுக்க விஷுவல் டிரீட் மட்டுமே படத்தில் உள்ளது, கதை பெரிதாக இல்லை என்ற விமர்சனங்கள் படத்திற்கு வந்துள்ளது. பள்ளிகளில் தற்போது அரையாண்டுத் தேர்வு நடைபெற்று வருவதால் குழந்தைகளுடன், குடும்பத்தினர் படத்திற்குப் போக முடியாத நிலை உள்ளது. அடுத்த வார இறுதியில் தேர்வுகள் முடிந்த பின்னர் தான் அவர்கள் போவார்கள். எனவே, இந்த வார வசூல் நிலவரம் எதிர்பார்த்த அளவிற்கு இருக்க வாய்ப்பில்லை என்றே பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.