ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது |

எண்பது, தொண்ணூறுகளில் மலையாளம் மற்றும் தமிழில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை ஷோபனா. தமிழில் இது நம்ம ஆளு, தளபதி படம் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். ஒரு கட்டத்தில் நடிப்பை குறைத்துக் கொண்டு நடனத்தில் ஆர்வம் செலுத்தி நடனப்பயிற்சி பள்ளி ஒன்றையும் நடத்தி வருகிறார். அதுமட்டுமல்ல ஆன்மிக பயணங்களையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில் தற்போது கேதார்நாத் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஷோபனா அங்கே திடீரென பனி மூடிய காரணத்தால் கேதார்நாத் தரிசனம் செய்ய தடை ஏற்பட்டுள்ளதாக சோசியல் மீடியாவில் ஒரு வீடியோ மூலம் பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில், “இதோ நீங்கள் தூரத்தில் பார்க்கும் தங்கப்புள்ளி போல தெரிவதுதான் கேதார்நாத் கோவில்.. ஹெலிகாப்டர் எங்களை அழைத்துச் செல்ல வந்தும் அதிக பனியின் காரணமாக எங்களது பயணம் தடைபட்டு நிற்கிறது. ஒரு ரிப்போர்ட்டர் போல இப்போது உங்களுக்கு நான் செய்திகளை வழங்கிக் கொண்டிருக்கிறேன்” என்று கூறியுள்ளார் ஷோபனா.
தடைபட்ட பயணத்தை பனி விலகியதும் மேற்கொண்டாரா அல்லது அங்கிருந்தபடியே திரும்பி விட்டாரா என்பது பற்றி எந்த தகவலையும் அடுத்ததாக அவர் குறிப்பிடவில்லை.




