லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
சுகுமார் இயக்கத்தில், தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் மற்றும் பலர் நடிக்கும் 'புஷ்பா 2' படத்தின் அறிவிப்பு வீடியோவை விரைவில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.
2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்தப் படத்தின் முதல் பாகம் பான் இந்தியா படமாக வெளிவந்து வசூலைக் குவித்தது. இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பை உடனடியாக ஆரம்பிக்காமல் காலம் தாழ்த்தி வந்தார்கள். திரைக்கதையை விறுவிறுப்பாக எழுத வேண்டும் என நேரம் எடுத்துக் கொண்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இரண்டாம் பாகப் படப்பிடிப்பை சமீபத்தில் ஆரம்பித்துள்ளார்கள்.
படப்பிடிப்பு ஆரம்பமானது பற்றி பல விதத் தகவல்கள் வெளிவந்த நிலையில் அதிகாரப்பூர்வமாக அது பற்றி ஒரு அறிமுக வீடியோவை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாம். அடுத்த சில நாட்களில் அதை வெளியிடலாம் என்கிறார்கள். அதில் பட வெளியீடு குறித்த அறிவிப்பு வருமா அல்லது படப்பிடிப்பு பற்றிய அறிவிப்பு வருமா என்று ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
இரண்டாம் பாகத்தில் புதிதாக இணைந்துள்ள நடிகர்கள் பற்றிய தகவலும் இடம் பெறலாம் எனத் தெரிகிறது. இரண்டாம் பாகத்தை முதல் பாகத்தை விடவும் அதிக பொருட் செலவிலும், பிரம்மாண்டமாகவும் தயாரிக்க முடிவு செய்துள்ளார்கள் என்பதும் டோலிவுட் தகவல்.