வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
இந்த வருட துவக்கத்தில் ஹிந்தியில் வெளியாகி மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய படம் காஷ்மீர் பைல்ஸ். இந்த படத்தை விவேக் அக்னிஹோத்ரி என்பவர் இயக்கியிருந்தார். தொண்ணூறுகளின் காலகட்டத்தில் காஷ்மீரில் இந்து பண்டிட்களுக்கு எதிராக நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களையும், அதனால் பாதிக்கப்பட்ட பண்டிட்கள் காஷ்மீரைவிட்டு வெளியேறி, அண்டை மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்த உண்மைச் சம்பவங்களையும் அடிப்படையாகக்கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டிருந்தது. அதனாலேயே பாலிவுட்டையும் தாண்டி மற்ற மொழிகளிலும் இந்தப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில் தற்போது, தான் அடுத்ததாக இயக்க உள்ள படம் குறித்து அதிகாரபூர்வமாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார் இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி. அதுமட்டுமல்ல இந்தப்படம் 2023 ஆகஸ்ட் 15-ல் வெளியாகும் என்பதையும் தற்போதே அறிவித்து விட்டார். இந்த புதிய படத்திற்கு ‛வேக்சின் வார்' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த படமும் அவரது முந்தைய படத்தைப்போல சில அறியப்படாத விஷயங்களை பற்றி பேச இருக்கிறது என்பதை படத்தின் டேக்லைனிலேயே சுட்டிக் காட்டியுள்ளார் இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி. அதாவது இந்தியா நடத்திய ஒரு யுத்தத்தில் நடைபெற்ற அறியப்படாத சில நிகழ்வுகளும் அந்த யுத்தத்தில் எப்படி அறிவியல்பூர்வமாக தைரியமாக மிகப்பெரிய வெற்றியை இந்தியா பெற்றது என்பது பற்றியும் சொல்ல இருக்கிறாராம் விவேக் அக்னிஹோத்ரி.