லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
இயக்குனர் மணிரத்னத்தின் 'உயிரே' படத்தில் இடம்பெற்ற 'தைய்ய தைய்யா' என்ற ஒரே பாடல் மூலம் புகழின் உச்சிக்கே சென்றவர் நடிகை மலைகா அரோரா. 1998ல் பாலிவுட்டில் அறிமுகமான நிலையில், அதே ஆண்டு நடிகர் சல்மான் கானின் சகோதரர் அர்பாஸ் கானை திருமணம் செய்து கொண்டார். 19 ஆண்டுகள் கடந்த நிலையில் 2017ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றனர். இவர்களுக்கு 20 வயதில் அர்ஹான் எனும் மகன் இருகிறார் .
இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் போனி கபூரின் மகனும், பாலிவுட் நடிகருமான அர்ஜூன் கபூருடன் நெருங்கி பழகி வந்தார் மலைகா அரோரா. இவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். ஆனால் இதுவரை இருவரும் வெளிப்படையாக கூறியதில்லை. தற்போது 49 வயதாகும் மலைகா அரோராவும், அவரை விட 12 வயது இளையவரான நடிகர் அர்ஜூன் கபூரும் காதலித்து வருவது பாலிவுட்டில் அவ்வப்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் இவர்கள் திருமணம் செய்வார்கள் என கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த தகவலை உறுதிப்படுத்தும் விதமாக மலைகா தன் சமூகவலைத்தளத்தில், ‛‛நான் சம்மதம் சொல்லிவிட்டேன்'' என்று பதிவிட்டு ஹார்ட்டின்களை பதிவிட்டுள்ளார்.
இதைப்பார்த்த ரசிகர்கள் அர்ஜூன் உடன் திருமணத்துக்கு ஓகே சொல்லியதை தான் இப்படி மறைமுகமாக தெரிவித்துள்ளார் மலைகா என கருத்து பதிவிட்டு அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இன்னும் சிலரோ இது படத்தின் பப்ளிசிட்டிக்காக இருக்கலாம் என கூறி வருகின்றனர். எது உண்மை என்பது விரைவில் தெரியவரும்.