காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு | வெகுளித்தனமாக பதில் சொல்லி குஞ்சாக்கோ போபனுக்கு சங்கடத்தை கொண்டு வந்த டூப் ஆர்ட்டிஸ்ட் | விடாப்பிடியாக நின்று மோகன்லாலை சந்தித்த 80 வயது ரசிகை | பிளாஷ்பேக்: மொழி மாற்றம் செய்து வியாபாரப் போட்டியில் வென்று காட்டிய ஏ வி எம்மின் 'அரிச்சந்திரா' | ரஜினி பட இயக்குனர் யார் ? பரவும் தகவல்கள் | அன்பே வா, அவள் வருவாளா, நம்ம வீட்டுப் பிள்ளை - ஞாயிறு திரைப்படங்கள் |

கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள்ளேயே கன்னட திரைப்படங்கள் தங்களது வியாபார எல்லையை வைத்திருந்தன. ஆனால் கே ஜி எப் படத்தின் பான் இந்திய வெற்றி அதன்பிறகு கன்னட சினிமாவின் மீது மற்ற திரையுலகங்களின் பார்வையை திருப்பியது. அதைத்தொடர்ந்து வெளியான கேஜிஎப் 2 திரைப்படம் அதன் முதல் பாகத்தை விட மிகப்பெரிய வெற்றியைப் பெற்று பாலிவுட்டில் வெளியாகும் படங்களுக்கு சவால் விடும் அளவிற்கு மிகப்பெரிய அளவில் வசூலையும் குவித்தது.
இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்திருந்த நயன்தாரா திரைப்படம் கேஜிஎப் ஏற்படுத்தியது போன்று தென்னிந்திய திரையுலகிலும் பாலிவுட்டிலும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கேஜிஎப் உருவாக்கி வைத்துள்ள சாதனைகளை இன்னொரு கன்னட திரைப்படம் முறியடிப்பதற்கு நீண்ட நாள் ஆகும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது காந்தாரா திரைப்படம் கேஜிஎப் படத்தின் சில சாதனைகளை முறியடிக்க துவங்கியுள்ளது.
அந்தவகையில் இதற்கு முன்னதாக கர்நாடகாவில் வெளியான கேஜிஎப் படத்தின் முதல் பாகத்திற்கு 72 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. தற்போது இதுவரை காந்தாரா திரைப்படத்திற்கு அதைவிட மூன்று லட்சம் டிக்கெட்டுகள் அதிகமாக 75 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகி உள்ளன என்று விநியோகஸ்தர்கள் வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
அதுமட்டுமல்ல கேஜிஎப் 2 திரைப்படத்திற்கு கர்நாடகாவில் மட்டும் 77 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது தான் மிகப்பெரிய சாதனையாக இருந்து வருகிறது. இன்னும் இரண்டு லட்சம் டிக்கெட்டுகளை தாண்டினால் காந்தாரா திரைப்படம் அந்த சாதனையையும் முறியடிக்கும் அளவிற்கு கிட்டத்தட்ட நெருங்கி வந்துள்ளது. இன்னும் சில நாட்கள் சென்றபிறகு தான் காந்தாரா இன்னும் என்னென்ன சாதனைகளை செய்திருக்கிறது என்பது முழுதாக தெரியவரும்.




