வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் | ‛96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி |
ரிஷப் ஷெட்டி இயக்கம் நடிப்பில் கடந்த மாதம் 30ம் தேதி வெளிவந்த கன்னடப் படம் 'காந்தாரா'. கர்நாடகாவில் மட்டும் 100 கோடி வசூலைக் கடந்து சாதனை படைத்தது. கடந்த வாரத்தில் தமிழ், ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் டப்பிங் ஆகி வெளியானது. அனைத்து மொழிகளிலும் படத்திற்குப் பாராட்டுக்களும் நல்ல வரவேற்பும் கிடைத்தது.
தற்போது இப்படத்தின் மொத்த உலக வசூல் 180 கோடியைக் கடந்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் 165 கோடியும், வெளிநாடுகளில் 15 கோடியும் வசூலித்துள்ளதாம். இன்னும் ஒரு வாரத்திற்கு மேலும் படம் தியேட்டர்களில் தாராளமாக ஓடும் என்கிறார்கள். சுமார் 15 கோடி செலவில் எடுக்கப்பட்ட ஒரு படம் தியேட்டர்களில் ஓடி முடிவதற்குள் 200 கோடி வசூலைக் கடந்துவிடும் என்பது கன்னடத் திரையுலகத்தின் தகவல்.
'காந்தாரா' படத்தின் வெற்றி மற்ற மொழி திரையுலகத்தினரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. ஒரு படத்திற்குக் கதை, திரைக்கதை என்பதுதான் மிகவும் முக்கியம் என்பதை இந்தப் படம் மீண்டும் நிரூபித்துள்ளது. கன்னட சினிமா ரசிகர்களுக்கு மட்டுமே தெரிந்த ரிஷப் ஷெட்டி, தற்போது இந்தியா முழுவதும் தெரிந்த பான் இந்தியா ஸ்டார் ஆக மாறிவிட்டார்.