'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
மணிரத்னம் இயக்கத்தில் கடந்த மாதம் வெளிவந்த சரித்திரப் படம் 'பொன்னியின் செல்வன்'. படம் வெளிவந்து மூன்று வாரங்கள் கடந்துள்ள நிலையில் தற்போதும் தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இத்தனைக்கும் தீபாவளி வெளியீடாக நேற்று 'சர்தார், ப்ரின்ஸ்' ஆகிய படங்கள் வெளிவந்துள்ளன. இந்த இரண்டு படங்கள் கூட ஹவுஸ்புல் ஆகாமல் இருக்கின்றன. ஆனால், 'பொன்னியின் செல்வன்' பல தியேட்டர்களில் ஹவுஸ்புல் ஆகி ஓடுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்று, நாளை, நாளை மறுநாள் ஆகிய மூன்று தினங்களிலும் பல தியேட்டர்களில் இப்படம் 90 சதவீதம் வரையிலும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாட்களின் வசூல் சிறப்பாகவே இருப்பதால் படம் எப்படியும் 500 கோடியைக் கடந்துவிடும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகம் மட்டுமல்லாது கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிராவிலும் படம் இன்னமும் ஓடிக் கொண்டிருக்கிறது.
'பிளாக் ஆடம்' ஆங்கிலப் படம் வந்ததால் சென்னையில் உள்ள ஐமேக்ஸ் தியேட்டர்களில் 'பொன்னியின் செல்வன்' படத்தைத் தூக்கிவிட்டார்கள். அவற்றிலும் படம் தொடர்ந்திருந்தால் நிச்சயம் அரங்கு நிறைந்த காட்சிகளாகவே முன்பதிவு செய்யப்பட்டு ஓடிக் கொண்டிருந்திருக்கும். அவற்றில் படம் இல்லாதது ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.