சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
பொன்னியின் செல்வனில் பூங்குழலியாக நடித்த ஐஸ்வர்ய லட்சுமி நடித்துள்ள தெலுங்கு படம் அம்மு. இதில் நவீன் சந்திரா, பாபி சிம்ஹா நடித்துள்ளனர். கார்த்திக் சுப்பராஜ் தயாரித்துள்ளார். தெலுங்கில் நேரிடையாகவும், தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தியில் மொழிமாற்றம் செய்யப்பட்டும் வருகிற 24ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
இந்த படத்தில் போலீஸ் கணவனின் கொடுமையில் இருந்து தப்பிக்க கைதி ஒருவருடன் இணைவதும், பின்பு அந்த சிக்கலில் இருந்து விடுபடுவதுமான ஒரு பெண்ணின் கதை. இதில் அந்த பெண் அம்முவாக ஐஸ்வர்ய லட்சுமியும், கணவனாக நவீன் சந்திராவும், கைதியாக பாபி சிம்ஹாவும் நடித்துள்ளர்.
இதில் நடித்திருப்பது பற்றி ஐஸ்வர்ய லட்சுமி கூறியதாவது: தவறான உறவில் சிக்கிய ஒரு பெண்ணின் பாத்திரத்தை எனக்குச் சித்தரிப்பது சவாலாகவும், அதன் தனிப்பட்ட முறையில் வலுப்படுத்துவதாகவும் இருந்தது. ஒரு பெண்ணாக அம்முவுடன் தொடர்பு கொள்ள நிறைய இருக்கிறது, அதில் மிக முக்கியமானது எப்போதும் ஒருவரின் உண்மையைப் பேசுவதும் ஒருவரின் சுயத்திற்காக நிற்பதும் ஆகும். அம்மு பற்றிய பார்வையாளர்களின் கருத்துக்களுக்காக காத்திருக்கிறேன். என்கிறார்.