பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' |
ஒரு படம் வெற்றி பெற்றுவிட்டால் அதே பாணியில் படங்கள் வருவதும், தலைப்பு வைக்கப்படுவதும் புதிதல்ல. நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது பொன்னியின் செல்வன் படத்திற்கும் அது நடந்து வருகிறது.
பொன்னியின் செல்வன் படத்தில் வரும் வந்தியத்தேவன் கேரக்டரை மட்டும் பிரதானமாக கொண்டு வந்தியத்தேவன் என்ற பெயரில் ஒரு படம் எடுக்க பல ஆண்டுகளுக்கு முன்பே முயற்சித்தாகவும், அதில் கார்த்தி நடிப்பதாக இருந்ததாகவும் தயாரிப்பாளர் எஸ்.தாணு கூறியிருந்தார். இப்போது அந்த படத்தை தயாரிக்கும் திட்டத்திலும் அவர் இருக்கிறார்.
இதற்கிடையில் ராணி நந்தினி, பழுவேட்டரையர், அருள்மொழி வர்மன் என்ற பெயர்கள் படத்தின் தலைப்பாக பல சங்கங்களில் பதிவாகி வருகிறது. இந்த நிலையில் ஒரு நடிகையின் வாக்குமுலம் படத்தை இயக்கிய ராஜ் கிருண்ஷா 'வந்தியத்தேவன் மீது பி.சி.ஆர் வழக்கு' என்ற படத்தை இயக்கப்போவதாக அறிவித்திருக்கிறார்.
மரப்பாச்சி, ஆண்கள் ஜாக்கிரதை படங்களை தயாரித்த ஜெம்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அருள் ஒளிப்பதிவு செய்கிறார், பால கணேஷ் இசை அமைக்கிறார். “படத்தின் தலைப்பு வந்தியத்தேவன் என்று இருந்தாலும் இது வந்தியத்தேவனின் கதை அல்ல. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு உண்மை சம்பத்தின் அடிப்படையில் உருவாகும் படம். 26ம் தேதி இதன் படப்பிடிப்பு தொடங்கி ஒரே கட்டமாக முடிக்க இருக்கிறோம்” என்கிறார் இயக்குனர் ராஜ்கிருஷ்ணா.