அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத்தேவனாக நடித்திருக்கிறார் கார்த்தி . இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கார்த்தி கலந்து கொண்டபோது வீடியோ மூலம் இயக்குனர் செல்வராகவன் அவரிடத்தில் சில கேள்விகளை கேட்டார். அப்போது ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தில் நடிப்பீர்களா? என்று அவர் கேட்டதற்கு, ஆயிரத்தில் ஒருவன் தந்த வலியே இன்னும் மாறவில்லை. அது ஆறிய பின்னர் யோசிப்போம் என்று பதில் கொடுத்தார். அதன் பிறகு ஆயிரத்தில் ஒருவனுக்கும் பொன்னியின் செல்வன் படத்துக்கு இடையே உள்ள ஒரு ஒற்றுமை குறித்து கூறினார் செல்வராகவன். ஆயிரத்தில் ஒருவன் படத்தில் கார்த்தி நடித்த முத்து கேரக்டர் வந்தியத்தேவன் கேரக்டரை பார்த்துதான் உருவாக்கியதாக தெரிவித்தார். அதனால் ஏற்கனவே கார்த்தி இன்னொரு பெயரில் வந்திய தேவன் வேடத்தில் ஏற்கனவே நடித்து விட்டார் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.